தென்மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தென் மாவட்ட தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தென் மாவட்டங்களில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தென் மாவட்ட பள்ளிகளில் நடைபெற இருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகளும் கல்லூரி பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒரே நாளில் ரூ.97 லட்சம் டிப்ஸ் கிடைச்சுருக்கு! ஜொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தகவல்
இந்நிலையில் தென் மாவட்ட தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று நடக்க இருந்த டிஆர்பி (TRB) தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்திவைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, நேற்று (திங்கட்கிழமை) இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்த தென்மாவட்டத் தேர்வர்களும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். கோரிக்கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்று தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
வோட் ஆன் அக்கவுண்ட் என்றால் என்ன? மோடி அரசு பொதுத் தேர்தலைச் சந்திக்க கை கொடுக்குமா?