ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் புறநகர் பகுதியில் மின்சார வயர்களில் ஏற்பட்ட தீ விபத்தால் நகரில் உள்ள லட்சக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் புறநகர் பகுதியான சய்தாமாவில் உள்ள நிஸ்சா நகரில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள மின் வயர்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக நாகடச்சூ மற்றும் கசுமிகாசேசி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,50,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியிருப்பதாக ஜப்பானின் முதன்மை கேபினட் செயலாளர் யோஷ்ஷிடே சுஹா தெரிவித்துள்ளார். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு சில மணிநேரங்களில் இந்த பிரச்னை தீர்க்கப்படும் என்றும் டோக்கியா மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.