Asianet News TamilAsianet News Tamil

தினமும் 5.8 லட்சம் சம்பாதிக்கும் TikToker! யார் இந்த Pinkydoll?

NPC ஸ்ட்ரீமிங்கின் ஒரே நாளில், பிங்கி டால் $7,000 (தோராயமாக ரூ. 5.8 லட்சம்) சம்பாதித்ததை பெருமையாகக் கூறி, அவரது ரசிகர்களையும் விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

TikToker who earns 5.8 lakhs daily! Who is this Pinkydoll?
Author
First Published Jul 24, 2023, 9:59 AM IST

கனடா நாட்டின்ன் மாண்ட்ரீல் பகுதியை சேர்ந்த 27 வயதான பிங்கிடோல் (Pinkydoll) என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான டிக்டாக்கர் இருக்கிறார். Fedha Sinon என்ற அப்பெண் டிக்டாக்கில் பிங்க்டால் என்ற புகழ்பெற்ற டிக்டாக்கராக மாறிய பயணம் சற்று விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அது மில்லியன் கணக்கானவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரின் விசித்திரமான லைவ் ஸ்ட்ரீம்கள் அவரின் இந்த புகழுக்கு காரணமாக இருக்கலாம், 'NPC ஸ்ட்ரீமிங்' எனப்படும் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரங்களை புத்திசாலித்தனமாக பிரதிபலிக்கிறார்.

'NPC' என்ற சொல் வீடியோ கேம்களில் விளையாட முடியாத கேரக்டர்களை குறிக்கிறது, அவை திட்டமிடப்பட்ட சொற்றொடர்கள் மற்றும் செயல்களை மீண்டும் மீண்டும் செய்கின்றன. அவரது நிகழ்ச்சிகளில், பிங்கிடோல் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வரிகளை வழங்கும்போது கேமராவைப் பார்க்கிறார், அவரது பார்வையாளர்களுடன் வேடிக்கையாக உரையாடலில் ஈடுபடுகிறார். அப்பெண்ணின் முகபாவங்கள் “ஆம் ஆம் ஆம். ம்ம்ம், ஐஸ்க்ரீம் ரொம்ப நல்லா இருக்கு. ஓ, ம்ம்ம், ஐஸ்க்ரீம் ரொம்ப நல்லா இருக்கு. ஆம் ஆம் ஆம்” என்பது போன்ற வார்த்தைகளை அவர் தெரிவிக்கிறார். அவரின் இந்த லைவ் வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களால் லைல்-லேயே எதிர்வினையாற்றி வருகின்றனர். டிஜிட்டல் பரிசுகளை அவருக்கு அனுப்புகின்றனர்.

ரோஜாக்கள், டைனோசர்கள், ஐஸ்கிரீம் கோன் மற்றும் பல போன்ற மெய்நிகர் கார்ட்டூன் பொருட்கள் ஆகியவை அவரின் வீடியோக்களில் பரிசுகளாக அனுப்பப்படுகின்றன. ஆனால் இவை ஒவ்வொன்றும் பிங்கிடோலுக்கு பணம் செலுத்துவதைக் குறிக்கும். அற்பமானதாகத் தோன்றும் இந்த டிஜிட்டல் டோக்கன்கள் வியக்கத்தக்க தொகையைச் சேர்க்கின்றன.  ஒரு தனித்துவமான திறமையாளரை லாபகரமான ஆன்லைன் தொழிலாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது. NPC ஸ்ட்ரீமிங்கின் ஒரே நாளில், பிங்கி டால் $7,000 (தோராயமாக ரூ. 5.8 லட்சம்) சம்பாதித்ததை பெருமையாகக் கூறி, அவரது ரசிகர்களையும் விமர்சகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

அது மட்டுமல்ல, டிக் டாக் செயலியை தாண்டி மற்ற சமூக ஊடக தளங்களில் பிங்கி டோலின் புகழ் பரவியது. அவரது லைவ் வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாகி, மில்லியன் கணக்கான ரீ ட்வீட்களை பெற்றது.  உதாரணமாக, "ஐஸ்கிரீம் மிகவும் நல்லது" என்று அவரது வைரல் கிளிப் மில்லியன் கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிங்கி டால், டிக் டாக்கில் கிட்டத்தட்ட 5,53,000 ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் அவருக்கென தனிப்பட்ட விக்கிபீடியா பக்கமும் உள்ளது, அங்கு ரசிகர்கள் அவரை "ஸ்டார் குவாலிட்டி" மற்றும் "தேன் போன்ற குரல்" உடையவர் என்று வர்ணித்து, ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

ரூ.1,200 கோடிக்கு லண்டனில் மேன்ஷன் வாங்கிய இந்திய தொழிலதிபர் ரவி ரூயா!

Follow Us:
Download App:
  • android
  • ios