al zawahiri: Al Qaeda: அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவர் இவரா?
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த அல் ஜவாஹிரி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டைத் தொடர்ந்து புதிய தலைவராக யார் வரப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த அல் ஜவாஹிரி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டைத் தொடர்ந்து புதிய தலைவராக யார் வரப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஓசாமா பின்லேடன் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டபின், அல்ஜவாஹிரி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். 2001 அமெரி்க்கத் தாக்குதலுக்கு அல்கொய்தாவுக்கு மூளையாக இருந்தவர்களில் அல்ஜவாஹிரியும் ஒருவர் என்பதால், அவர் தலைக்கும் அமெரிக்கா குறி வைத்தது.
அல் ஜவாஹிரியைக் காட்டிக்கொடுத்தது யார்? ஐஎம்எப் நிதிக்காக போட்டுக்கொடுத்த பாகிஸ்தான்
அமெரிக்காவின் கண்களுக்கு தெரியாமல் அல்ஜவாஹிரி மறைந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி இரவு காபூல் நகரில் ஒருவீட்டில் பதுங்கி இருந்த அல்ஜவாஹிரியை அமெரிக்க ட்ரோன் ஏவுகணை வீசி கொன்றது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறுகையில் “ 2001ம் ஆண்டு அமெரி்க்கத் தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது. ஜவாஹிரி இறப்பு அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 3ஆயிரம் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும்” எனத் தெரிவித்தார்
கடந்த 2011ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக அல்ஜவாஹிரி பொறுப்பேற்றார். இப்போது அல் ஜவாஹிரி இல்லாததால் அல்கொய்தா அமைப்பு அழிந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஆனால், மத்திய கிழக்கு அரசியல் ஆய்வு நிறுவனங்கள் கூறுகையில் “ அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவராக சைப் அல் அதெல் பொறுப்பேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டின் முன்னாள் ராணுவ வீரரான அதெல், அல்கொய்தா அமைப்பை தோற்றுவித்த உறுப்பினர்களில் ஒருவர். கடந்த 1980களில் மக்தப் அல் கித்மாத் எனும் தீவிரவாத அமைப்பில் இணைந்து நடத்தியவர்
ஒசாமா பின்லேடனையும், அய்மான் அல் ஜவாஹிரியையும் சந்தித்த அதெல், அதன்பின் எகிபுத் இஸ்லாமிக் ஜிகாத்தில் இணைந்தார். கடந்த 1980களில் ஆப்கானிஸ்தான் ரஷ்ய ராணுவத்துக்க எதிராக அதெல் போராடியுள்ளார்.
ஒசாமா பின் லேடனின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும் அதெல் இருந்தார். அமெரிக்க எப்பிஐ அமைப்பால் அதிகமாகத் தேடப்பட்ட நபராக கடந்த 2001ல் இருந்து அதெல் இருந்து வருகிறார்.
அதெல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி டாலர் பரிசும் அமெரி்க்கா அறிவித்திருந்தது.
அமெரிக்க எப்பிஐ கூற்றுப்படி, “ அமெரி்க்க மக்களை கொன்றதில் சதித்திட்டம், கொலை செய்தல், கட்டிடங்கலைதரைமட்டமாக்குதல், அமெரிக்க சொத்துக்களை அழித்தல், பாதுகாப்புதுறை சொத்துக்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் அதெல் மீது குற்றம்சாட்டுப்பட்டுள்ளது” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
adolf hitler: ஹிட்லர் பயன்படுத்திய கைக் கடிகாரம் ரூ.8.71 கோடிக்கு ஏலம்: யூதத் தலைவர்கள் எதிர்ப்பு
உண்மையில் அதெலை கடந்த 1993ம் ஆண்டிலிருந்தே அமெரிக்க ராணுவம் சல்லைபோட்டு தேடி வருகிறது. சோமாலியாவில் உள்ள மொகாடிசுவில் அமெரி்க்க ஹெலிகாப்டர், 18 ராணுவ வீரர்களையும் அழித்த தாக்குதலுக்கு அதெல் காரணமாக இருந்தார்.