என்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும்; ஆஸ்திரேலிய பெண் உளவியலாளர் கூறும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏரி கேலா எனும் பெண் உளவியலாளர், தன்னிடம் ஒரு வித்தியாசமான சக்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 24 வயதே ஆன இவர் தற்போது உளவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கூறும் போது தன்னால் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்பதை, முன்கூட்டியே கணிக்க முடியும் என கூறுகிறார்.
அவரது கணிப்பு பலமுறை அப்படியே நடந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கும் கேலா, முதல் முறையாக இந்த விஷயத்தை கண்டுவிடித்தது, தனது 12வது வயதில் தானாம். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்ற கேலா அங்கு ஏதோ வித்தியாசமான வாடை வருவதை உணர்ந்திருக்கிறார்.
அழுகிய பழத்திலிருந்து வரும் ஒருவகையான வாடையை உணர்ந்த அவர், எங்கிருந்து வருகிறது என தேடி இருக்கிறார் ஆனால் அப்படி எந்த வித பொருளும் அங்கு இல்லை. மேலும் அவர் அருகில் இருந்த மற்ற யாருக்கும் அப்படி எந்த வாசனையும் வரவில்லை.
அதன் பிறகு அடுத்த நாளே அவரின் உறவினர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேலாவிற்கு கிடைத்திருக்கிறது. இதே போன்ற சம்பவம் பல முறை தன் வாழ்வில் நடந்ததாக குறிப்பிடும் கேலா, ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் நிகழும் முன் இதே போன்ற வாடையை உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.
உளவியல் நிபுணரான இவர் இது போன்று கூறுவதை, அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்கள் கேலி செய்து வருகின்றனர். ஆனால் கேலா கூறும் போது ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு சக்தி இருக்கும். ஆனால் இந்த சமுதாயத்தில் என்ன நினைப்பார்கள்? என்ற எண்ணத்தில் நாம் அதை அடக்குகிறோம். கடைசியில் அந்த சக்தி நம்மை விட்டு போய் விடுகிறது.
நான் இப்போது கிராமப்புறத்தில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களிடம் இருக்கும் சக்தி என்ன? என்பதை அறிந்து அதை நல்ல வழியில் உபயோகிக்க பயிற்ச்சி அளித்து வருகிறேன். என தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் யார் அருகில் இந்த வாடையை உணர்கிறாரோ, அவரிடம் அந்த விஷயத்தை தெரிவிப்பதில்லையாம். என்னால் அவர்களது மரணத்தை தடுக்க முடியவில்லை. வீணாக அதை கூறி கடைசி நேரத்தில் அவர்களது நிம்மதியை ஏன் கெடுக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி இருக்கிறார் கேலா.
இவர் பேசுவது ஒரு பக்கம் அறிவியல் பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாததுதான் என்றாலும், ஒருவர் இறக்கும் முன் இது போன்ற சில அறிகுறிகள் அந்த இடத்தில் தென்படும். மிக சிலரால் மட்டுமே அதை உணரமுடியும் என்ற கருத்தும் உலக மக்கள் மத்தியில் இருக்கிறது.