தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண்? குடும்பத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்.. உண்மை என்ன?

கடந்த 2018-ம் ஆண்டு 37 வயதான Rosangela Almeida dos Santos இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பிரேசிலின் வடகிழக்கில் உள்ள Riachao das Neves நகரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. 

The woman who was buried alive by mistake.. The shocking information told by the family.. What is the truth?

பிரேசிலில் பெண் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டதாகவும், சவப்பெட்டியில் இருந்து வெளியேற 11 நாட்கள் அவர் போராடியிருக்கலாம் என்றும் அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு 37 வயதான Rosangela Almeida dos Santos இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பிரேசிலின் வடகிழக்கில் உள்ள Riachao das Neves நகரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. ரோசங்கலா அல்மேடா ஜனவரி 28 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் சென்ஹோரா சந்தனா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள்.

ஆனால் கல்லறையிலிருந்து அலறல் மற்றும் முனகல் சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர்கள் கூறியதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அப்பெண்ணின் கல்லறையைத் தோண்டியுள்ளனர்.அப்போது சவப்பேடிக்குள் ரோசங்கலா அல்மேடாவின் மணிக்கட்டு மற்றும் நெற்றியில், ரத்தக் காயங்கள் இருந்துள்ளது. மேலும் அந்த சவப்பெட்டியின் மூடி தளர்ந்துள்ளது.அவரை அடக்கம் செய்த போது இந்த காயங்கள் இல்லை என்று குடும்ப உறுப்பினர்கள் உறுதியாக கூறினர். இருப்பினும்  தோண்டியெடுக்கப்பட்டபோது ரோசங்கலா உயிருடன் இல்லை.

சிங்கப்பூரை திடுக்கிடவைத்த வெளிநாட்டினர்.. 6000 கோடி பண மோசடி - கார் மற்றும் ஆடம்பர பொருட்கள் பறிமுதல்!

எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.அதன்ப்டி கூக்குரல்கள் மற்றும் இடித்தல் போன்ற கூற்றுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தோண்டியெடுப்பில் ஈடுபட்டவர்கள் கல்லறைக்கு இடையூறு விளைவித்ததற்கான சாத்தியமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். பிரேசிலிய சட்டத்தின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இறுதியில், சிவில் அதிகாரிகள் அந்த பெண் உயிருடன் புதைக்கப்படவில்லை என்று தீர்மானித்தனர். இதன் மூலம் இந்த சர்ச்சைக்குரிய வழக்கு முடிவுக்கு வந்தது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios