யாரும் தங்களது மரணத்தை கண்களால் பார்க்க முடியாது, அப்படி இருக்கையில், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் தனது கடைசி வாழ்நாள் நிமிடத்தை புகைப்படமாக எடுத்துவிட்டு உயிர் துறந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு, ஜூலை 2-ந்தேதி ஆப்கானிஸ்தானின், காபூலின் கிழக்கே இருக்கும் லக்மான் பிராந்தியத்தில், ஆப்கான் ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ராணுவத்தின் புகைப்பட பெண் கலைஞர் ஹில்டா ஐ கிளேடன் என்பவர் ராணுவத்தினரின் போர்பயிறச்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, திடீரென ஒரு சிறிய ரக பீரங்கியில் குண்டுகளை போட்டு வெடிக்க வைக்கும் போது, அது எதிர்பாராத விதமாக குண்டு பீரங்கி உள்ளேயே வெடித்துச் சிதறியது. அப்போது, அந்த பீரங்கி அருகே இருந்த 4 ராணுவ வீரர்களும், இந்த புகைப்படக் கலைஞர் கிளேடனும் உடல் சிதறி பலியானார்கள்.

ஆனால், தான் இறப்பதற்கு முன் பீரங்கியில் இருந்து குண்டு வெடித்துச் சிதறும் காட்சியை அந்த புகைப்படக் கலைஞர் கிளேடன் தனது கேமிராவில் மிகத் துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை மிகவும் பத்திரமாக வைத்து இருந்த அமெரிக்க ராணுவம், சமீபத்தில் தனது ராணுவ பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பிரசுரிக்கலமா என நீண்ட கால விவாத்துக்கு பின் வெளியாகியுள்ளது. ராணுவ பயிறச்சிக் களம் என்பது எந்த அளவுக்கு ஆபத்தானது, பாலினப் பாகுபாடு பணியாற்றும் ஆண்களுக்கும், பெண்களும் எந்த அளவு அபாயத்தை சந்திக்க நேரிடும் என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது.

தனது சாவை நேரில் சந்தித்து, அதையும் புகைப்படமாக எடுத்த கிளேட்டனின் செயல் என்றும் நினைவில் இருக்கும்.