Global Wealth2022:உலகின் பாதி சொத்துக்களை வைத்துள்ள அமெரி்க்க,சீன மக்கள்!இந்தியாவிடம் எவ்வளவு?ஸ்வாரஸ்ய அறிக்கை
உலகப் பொருளாதாரத்தில் பாதியளவு சொத்துக்கள் அமெரிக்கா மற்றும் சீன மக்களிடம்தான் உள்ளன என்று உலக செல்வவள அறிக்கையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
உலகப் பொருளாதாரத்தில் பாதியளவு சொத்துக்கள் அமெரிக்கா மற்றும் சீன மக்களிடம்தான் உள்ளன என்று உலக செல்வவள அறிக்கையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
உலகின் பொருளாதாரம், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் ஜிடிபி அளவில் கணக்கிடப்படுகிறது. இதை வைத்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரம், செல்வவளம் மதிப்பிடப்படுகிறது.
உலகச் செல்வவள அறிக்கை(Global Wealth Report ) வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அதிகமான பணத்தையும், சொத்துக்களையும் உலகளவில் வைத்துள்ள மக்களை அடிப்படையாக வைத்து இந்த உலக செல்வவள அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகளவில் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளவர்கள் அமெரிக்கா மற்றும்சீனாவைச் சேர்ந்த மக்கள் எனத் தெரியவந்துள்ளது.
உலகளவில் மதிப்பிடப்படும் சொத்துக்களில் பாதியளவு சொத்துக்களை வைத்துள்ளவர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவைச்சேர்ந்த மக்கள்தான். உலகின் பொருளாதார மதிப்பு 463 லட்சம் கோடி டாலராகும்.
உலகின் பொருளாதாரத்தில் அதிகபட்சமாக 31 சதவீதம் அல்லது 146 லட்சம் கோடி டாலர் சொத்துக்கள் அமெரிக்க மக்களிடம் உள்ளன.
2வது இடத்தில் 18.4% சீன மக்கள் வைத்துள்ளனர். சீன மக்களிடம் 85.1 லட்சம் கோடிடாலர்கள் சொத்துக்கள் உள்ளன. ஜப்பான் மக்களிடம் 5.5சதவீத சொத்துக்கள் உள்ளன, அதாவது 25.7 லட்சம் கோடி டாலர்கள் உள்ளன. ஜெர்மனி மக்களிடம்3.8 சதவீத சொத்துக்களும்(17.5லட்சம் கோடி டாலர்கள்), 5வது இடத்தில் பிரிட்டன் உள்ளது.
ஒருகாலத்தில் உலக நாடுகளையே தனது காலடியில் அடிமையாக்கி வைத்திருந்த பிரிட்டன் 5வது இடத்தில் உள்ளது, அந்நாட்டு மக்களிடம் 16.3 லட்சம் கோடி டாலர்கள் உள்ளன.
6-வது இடத்தில் பிரான்ஸ் 3.5 சதவீத பங்களிப்புடன்(16.2லட்சம் கோடி டாலர்கள்) உள்ளது. 7-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 3.1 சதவீதம் இந்தியாவிடம் உள்ளது, இங்குள்ள மக்கள் 14.20 லட்சம் கோடி டாலர்களை வைத்துள்ளனர்.
இன்னுமா லாக்டவுன்! சீன அரசின் முரட்டு விதிகளுக்கு எதிராக மக்கள் வன்முறை! வைரல் வீடியோ
அமெரிக்கா, சீனாவைத் தவிர பிற நாடுகள் அனைத்தின் சதவீதமும் உலகப் பொருளாதாரத்தில் ஒற்றை இலக்க சதவீதத்தையே வைத்துள்ளன. வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ரஷ்யா குறித்து எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை.
8வது இடத்தில் கனடா(2.7%), 9-வது இடத்தில் இத்தாலி(2.5%) 10-வது இடத்தில் ஆஸ்திரேலியா (2.3%) உள்ளன. 11 முதல் 15வது இடங்களில், தென் கொரியா, ஸ்பெயின், தைவான், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளிடம்தான் உலகின் 75 சதவீத சொத்துக்கள் உள்ளன.
சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது: பிரதமர் மோடி பெருமிதம்
இதில் மிகப்பெரிய மாற்றம் என்னவெனில் சமீபகாலத்தில் சீனாவின் சொத்துக்கள் மதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, சீன மக்கள் உலகின் சொத்துக்களில் 9 சதவீதத்தையே வைத்திருந்தார்கள். இப்போது இது இரு மடங்காகியுள்ளது. சீனாவில் 2000 ஆண்டில், சராசரியாக செல்வம் வைத்திருப்போர் 3,111 கோடி டாலராக இருந்தது. இது 2021ம்ஆண்டில் 26,752 கோடி டாலராக அதிகரி்த்துள்ளது.
பிராந்திய அடிப்படையில் சொத்துக்கள் வைத்திருக்கும் நாடுகள் குறித்துப் பார்க்கும்போது வடஅமெரிக்க மக்களிடம்தான் அதிகமான சொத்துக்கள் உள்ளன. உலகளவில் 35 சதவீத சொத்துக்களை வடஅமெரிக்க மக்கள் வைத்துள்ளனர். அடுத்தார்போல் ஆசியாவில் 33.8 சதவீத மக்கள் வைத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் 22.8 சதவீதத்தையும் தன்னகத்தே வைத்துள்ளனர்.
ஓசியானியா நாடுகள் 2.7%, மத்திய கிழக்கு நாடுகள் 2.1 சதவீதம், தென் அமெரிக்கா 1.4 சதவீதம், ஆப்பிரிக்கா 0.9 சதவீதம், உலகின் பிற நாடுகள் 1.3% வைத்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய மக்களின் சொத்து மதிப்பு 8 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஓசினியா, மத்திய கிழக்கு நாடுகள் சேர்ந்து 11சதவீதத்தை வைத்துள்ளன.
- asia wealth report
- credit suisse global wealth report
- global wealth
- global wealth report
- global wealth report 2010
- global wealth report 2015
- global wealth report 2017
- global wealth report 2018
- global wealth report 2018 bcg
- global wealth report 2018 pdf
- global wealth report 2019
- global wealth report bcg
- global wealth report credit suisse
- us wealth report
- wealth
- wealth inequality
- wealth management
- wealth report
- world wealth report
- USA
- China
- India
- France