சீனாவில் கடைபிடிக்கப்பட்டுவரும் ஜீரோ கொரோனா கொள்கை எனும் முரட்டுத்தனமான விதிகளால் பல நகரங்களில் லாக்டவுன் தொடர்ந்துவருகிறது. இதைக் கண்டித்து மிகப்பெரிய நகரான குவாங்ஜூவில் இன்று மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
சீனாவில் கடைபிடிக்கப்பட்டுவரும் ஜீரோ கொரோனா கொள்கை எனும் முரட்டுத்தனமான விதிகளால் பல நகரங்களில் லாக்டவுன் தொடர்ந்துவருகிறது. இதைக் கண்டித்து மிகப்பெரிய நகரான குவாங்ஜூவில் இன்று மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு கடைபிடிக்கும் கடினமான, முரட்டுத்தனமான விதிகளால் மக்கள் இன்னும் சந்திரமான வாழ்க்கையை வாழ முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பதாகைகளை ஏந்தியும், பேனர்களுடனும் சாலையில் இறங்கி போராடினார்கள்
உலக மக்கள் தொகை இன்று 800 கோடியை எட்டுகிறது: சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா. அறிவிப்பு

சமூக வலைத்தளத்தில் வலம் வந்த வீடியோவில், “ ஹெய்ஜூ மாவட்டத்தில் உள்ள குவாங்ஜூ நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் பதாகைகள், பேனர்களுடன் நடந்து வந்து, லாக்டவுனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், கலைக்கவும் உள்ளூர் நிர்வாகம் ஏராளமான போலீஸாரைக் குவித்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய மாணவர்களுக்காக திறக்கப்படும் அமெரிக்க கதவுகள்! சீனாவுக்கு ‘ஷட்’
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு ஹெய்சு நிர்வாகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
சீனாவில் ஜூரை கொரோனா கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. அதாவது கொரோனா பரவலை இல்லாத சூழலை உருவாக்க உள்ளது. ஏதாவது ஒரு நகரில் கொரோனா பரவல் இருந்தால் உடனடியாக அங்கு பரிசோத, ஊரடங்கு விதிக்கப்பட்டுவருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரிசோதனை, ஊரடங்கு என வீட்டுக்குள்ளே முடக்கி மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றனர். மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் முடங்கி, வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல், உணவுகளை வாங்க முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களைச்சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் குவாங்ஜூ, பன்யு,லிவான ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது 5ஆயிரத்தை எட்டியதால் லாக்டவுனை தீவிரப்படுத்தியது அரசு.
ஆனால், அரசின் லாக்டவுனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குவாங்ஜூ நகரில் இன்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் திடீரென சாலையில் இறங்கி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் நடத்துவதற்கு முன், சீனாவின் சமூக வலைத்தளமான வீபோ மற்றும் வீசாட்டில் ஏராளமன மக்கள் போராட்டம் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்து ஒன்று சேர்ந்துள்ளனர். இதையடுத்து, குவாங்ஜூ ஹெய்சு மாவட்டம் என்ற பெயர், ஹேஸ்டேக் வீபோ, வீசாட் தளத்தில் வைரலாகியது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க, பிரான்ஸ் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு
சீனாவில் நேற்று மட்டும் 17ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின்அதிகபட்சமாகும். மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகளை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
