Asianet News TamilAsianet News Tamil

G 20 Summit 2022: சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது: பிரதமர் மோடி பெருமிதம்

சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது. இரு நாடுகளும் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களைக் பகிர்ந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார்

PM Modi says India has stood firm with Indonesia during  challenging times
Author
First Published Nov 15, 2022, 4:53 PM IST

சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது. இரு நாடுகளும் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களைக் பகிர்ந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார்

இந்தோனேசியாவில் பாலி நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சென்றார். இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க, பிரான்ஸ் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு

 முதல்நாளான இன்று ஜி20 மாநாட்டில் உணவுப்பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து  பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், நெதர்லாந்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

 

இந்த மாநாட்டின் இடையே இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இன்று பேசியதாவது:

உக்ரைனில் போர் நிறுத்தம் தேவை:இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவுச் சிக்கல்: பிரதமர் மோடி பேச்சு

கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த கடினமான நேரத்தில் இந்தோனேசியாவுக்கு உடனுக்குடன் இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இந்தோனேசியாவுக்கு மனிதநேய உதவிகளுக்காக ஆப்ரேஷன் சமுத்ரா மைத்ரி என்று செயல்படுத்தி தேவையான உதவிகளை இந்தியா வழங்கியது.

சிறந்த காலக்கட்டத்திலும் சரி, கடினமான, சவாலான காலகட்டத்திலும் சரி இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நட்புறவு வலிமையாக இருந்தது. இந்தோனேசியாவுக்கு ஏற்பட்ட சவாலான நேரத்தில் இந்தியா பக்கபலமாக நின்றிருந்தது. 

கடந்த 2018ம் ஆண்டு நான் ஜகார்த்தா சென்றிருந்தபோது ஒன்று தெரிவித்தேன், இந்தியா, இந்தோனேசியா இடையேயான தொலைவு 90 கடல்மைல் தொலைவாக இருக்கலாம், ஆனால், உண்மையில், 90 கடல்மைல் தொலைவில் இருவரும் இல்லை, 90 கடல்மைல் நெருக்கத்தில் இருவரும் இருக்கிறோம்.

ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

PM Modi says India has stood firm with Indonesia during  challenging times

அந்த நேரத்தில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது, இந்தோனேசியாவில் ராமாயனப் பாரம்பரியம் இருக்கிறது என பெருமையுடன் நினைவுகூர்வோம். இந்தியா ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திரதினம் கொண்டாடுகிறது, இந்தோனேசியா ஆகஸ்ட் 17ம் தேதி கொண்டாடுகிறது. இந்தியா சுதந்திரதினம் கொண்டாடிய இருநாட்களில் இந்தோனேசியாவும் கொண்டாடுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios