Watch | சீன துறைமுகத்தில் வெடித்து சிதறிய கப்பல்! 1 கி.மீ-்க்கு அதிர்ந்த நிலப்பகுதி!
சீன துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பல் திடீரென வெடித்து சிதறியது. இதனால், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நில அதிர்வு ஏற்பட்டது.
உலகின் முக்கியமான மற்றும் பெரிய துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகம் விளங்குகிறது. அந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாங் மிங் மரைன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கப்பல் ஒன்று வெடித்தது.
YM மொபிலிட்டி சரக்குக் கப்பலில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் 1:40 மணியளவில் அந்த சரக்கு கப்பலில் இருந்த ஒரு கண்டெயனரில் எதிர்பாராத விதமாக, தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதனால், கப்பலில் கண்டெய்னருக்குள் இருந்த சரக்குகள் பயங்கர சத்தத்துடன் தூக்கிவீசிப்பட்டன. கப்பல் வெடித்ததில் அப்பகுதி வானம் முழுக்க கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கப்பலினுள் யாரும் இல்லாததால் எந்தவித உயிர்தேசமும் ஏற்பவில்லை.
இருப்பினும், கப்பல் வெடித்த அதிர்வில் சீன துறைமுகத்திலிருந்த ஓர் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களும், உணவு விடுதி ஒன்றின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. அதுமட்டுமின்றி, துறைமுகத்தைச் சுற்றி சுமார் 1 கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த நிலப்பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
BSNL SIM : வீட்டிலிருந்தே பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சிம்களை ஆர்டர் செய்யலாம்.. எப்படி தெரியுமா?