கொரோனாவை விரட்ட சரியான மருந்து... அசத்திக் காட்டிய ரஷ்யா..!
இது கொரோனா வைரஸ் சீனா வைரசின் முள் போன்ற அமைப்பினை அழிக்கும் ஆற்றலை உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட அனைவரிடமும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் லேண்ட்சட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரஷ்யா கடந்த மாதம் ஸ்புட்னிக் -5 தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்தது. இந்த மருந்து குறித்து லேண்ட்சட் மருத்துவ இதழ் ஆய்வு நடத்தியுள்ளது. எழுபத்தாறு பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 நாட்களில் அனைவருக்கும் எதிர்ப்பு சக்தி உண்டானதாகவும் 42 நாட்களும் பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சாதாரண சளியை உண்டாக்கும் அடினோ வைரஸின் இரண்டு வகைகளை ஒன்றிணைத்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் சீனா வைரசின் முள் போன்ற அமைப்பினை அழிக்கும் ஆற்றலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை ரஷ்யாவில் உள்ள மருத்துவமனைகளில் நடைபெற்றதாகவும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. பக்க விளைவுகளாக ஊசி செலுத்திய இடத்தில் வலி, தலை வலி, தசை வலி போன்றவை ஏற்படுத்தப்பட்டதாகவும் இது ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பரிசோதனைகள் மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்களிடமே நடத்தப்பட்டு இருப்பதால் மேலும் சோதனைகள் தேவைப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.