நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..
நேபாளத்தில் நேற்றிரவு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்றிரவு அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 மற்றும் 5.9 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர் அளவிலும், 1:30 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும் பதிவானதாக நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
பஜூரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலங்கின. நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை.! மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்- கனிமொழி
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு நேபாளத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மாண்டுவில் இருந்து மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள கோர்கா மாவட்டத்தின் பலுவா பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:50 மணிக்கு தாக்கியதாக காத்மாண்டுவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான லாம்ஜங் மற்றும் தன்ஹு மாவட்டங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
2015 ஆம் ஆண்டு நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்தனர். சுமார் ட்ட 22,000 பேர் காயமடைந்தனர். இது 800,000 வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை சேதப்படுத்தியது. இது 1934-ம் ஆண்டுக்கு பிறகு நேபாளத்தைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாகும். இந்த நிலநடுக்கம் எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவை ஏற்படுத்தியது, இது மலையில் நடந்த மிக மோசமான சம்பவமாக அமைந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : ஆபரேஷன் காவேரி.. 10-வது பேட்ச் இந்தியர்கள் சூடானில் இருந்து வெளியேற்றம்.. மத்திய அரசு தகவல்..