திருமணத்தில் விருந்தினர்களுக்கு விருந்தாகும் மணப்பெண் தோழிகள்..!
திருமணம் என்றால்... குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்குமே கொண்டாட்டம் தான். மிகவும் பாரம்பரிய முறையோடு கொண்டாடும் திருமணத்தில் தற்போது புது புது கலாச்சாரங்களும் இடம்பிடிக்கின்றன.
அந்த வகையில், சீனாவில் திருமண நிகழ்ச்சியின் போது, மணமகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுடைய தோழிகளுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
மணப்பெண் தோழிகளை 'Bridesmaids' என்று அழைப்பதை தான் அவர்கள் கௌரவத்தின் வெளிப்பாடாக பார்கின்றனர். இதனால் வாடகைக்கு கூட அவர்கள் மணப்பெண் தோழிகளை ஏற்பாடு செய்கின்றனர்.
இப்படி ஏற்பாடு செய்யப்படும் பெண்கள், அனைவரையும் கவரும் விதத்தில் படுகவர்ச்சியாக உடை அணிந்துக்கொண்டு வரும் விருந்தினர்களை கவரும் படி தோற்றம் அளிக்கின்றனர். மேலும் இப்படி வரும் பெண்களில் அதிகம் கல்லூரி பெண்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
அந்த மாணவிகள் தங்களுடைய பண தேவைக்காக இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
சில சீன திருமண நிகழ்ச்சிகளில், வரும் விருந்தினர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக மணப்பெண் தோழிகள் அனுப்பி வைக்கப் படுகின்றனர். இதற்காக சில திருமண நிகழ்சிகளில், விலை மாதுக்களை பெண் தோழியாக அழைத்து வரும் அவலமும் அரங்கேறி வருகிறதாம்.