அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி, அவரைப் போன்ற போலிக்கணக்கில் ட்வீட்டூம் நெட்டிஸன்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி, அவரைப் போன்ற போலிக்கணக்கில் ட்வீட்டூம் நெட்டிஸன்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்கிற்கு ஆதரவு தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்ட ட்விட்டர் கருத்துக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கணவர் மீது சுத்தியலால் தாக்கு:மண்டை உடைந்தது

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது, அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றபோது வன்முறை ஏற்பட்டது. இதில் அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் கலவரத்தை மேலும் தூண்டுவதுபோல் இருக்கும் என்பதால், ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது ட்விட்டர் நிர்வாகம். இதனால் 8.80 கோடி பாலோவர்கள் இருக்கும் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு முடங்கியது. 

கடந்த மே மாதம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபின் ட்ரம்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவேன் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு பதில் அளித்த டொனால்ட் டரம்ப், இனிமேல் ட்விட்டர் தளத்துக்கு வரமாட்டேன், அதற்குப் பதிலாகதனியாக ஒரு சமூக வலைத்தளம் தொடங்குவேன் எனத் தெரிவித்திருந்தார்

இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44,000 கோடி டாலருக்கு வியாழக்கிழமை விலைக்கு வாங்கினார். இதை ட்விட்டர் நிறுவனமும் அறிவித்தது. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் களையெடுக்கும் பணியில் இறங்கிய எலான் மஸ்க், 3 முக்கிய அதிகாரிகளான சிஇஓ பராக் அகர்வால், விஜயா கடே உள்ளிட்ட 3 பேரை பணியிலிருந்து நீக்கினார். மேலும், ட்விட்டர் ஊழியர்கள் ஏராளமனோரை பணிநீக்கிஆட்குறைப்பில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி - ரிஷி சுனக் முதல் சந்திப்பு ரெடி! இந்தோனேசியாவில் பக்காவாக பிளான் - எதற்கு தெரியுமா ?

இந்நிலையில் ட்விட்டரில் மீண்டும் இணையமாட்டேன் எனத் தெரிவித்து வந்த டொனால்ட் ட்ரம்ப் ட்வி்டரில் இணைந்துவிட்டதாக வெளியான செய்தியும், அவரைப் போன்று போலிக்கணக்கில் பதிவிட்ட செய்தியும் நெட்டிஸன்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Scroll to load tweet…

டொனால்ட் ட்ரம்ப்பின் போலி ட்விட்டர் கணக்கில் “ நன்றி எலான் மஸ்க்! மீண்டும் திரும்பி வந்தது மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை வெறுத்தவர்கள், விரும்பியவர்கள் அனைவரும் என்னைப் பிரிந்து வேதனைப்பட்டிருப்பார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டிற்கு 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 56ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர், 1.94 லட்சம் பேர் பதில் அளித்துள்ளனர்.