Singapore President விடைபெற்றார் ஹலிமா... சிங்கப்பூரின் 9வது அதிபராக இன்று பதவியேற்கிறார் தர்மன் சண்முகரத்னம்!
சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இன்று அவர் அதிபராக பதவியேற்கிறார்.
சிங்கப்பூரில் அதிபராக இருந்த 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் பதவி காலம் முடிவடைந்து நேற்றுடன் அவர் விடைபெற்றார். இதையொட்டி, சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் (சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்) தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் ஆவர்.
சிங்கப்பூர் அதிபர் ஆனார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்.. மாபெரும் வெற்றி !!
இதில், இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை அவர் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.