தாய்லாந்து மற்றும் கம்போடியா துருப்புக்கள் இடையே புதிய மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளும் தூதரக உறவுகளைக் குறைத் சில மணி நேரங்களில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா ராணுவத்திற்கு இடையே இன்று மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளும் தூதரக உறவுகளைக் குறைத்துக்கொண்ட சில மணி நேரங்களில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. எமரால்டு முக்கோணம் எனப்படும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்தப் பகுதியில் பல பழங்காலக் கோயில்கள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே இரத்தக்களரி மோதல் ஏற்பட்டது. மே மாதம் கம்போடிய வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Scroll to load tweet…

இந்த நிலையில் இன்று காலை தாய்லாந்தின் சுரின் மாகாணத்திற்கும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே மாகாணத்திற்கும் இடையிலான எல்லையில் உள்ள இரண்டு கோயில்களுக்கு அருகே மீண்டும் வன்முறை வெடித்ததாக கம்போடிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தாய்லாந்து ராணுவம் கம்போடியப் படைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தி கம்போடியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சீட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்தார். தாய்லாந்து ராணுவத்தின் கூற்றுப்படி, காலை 7:35 மணியளவில் தா முன் கோயிலைக் காக்கும் ஒரு பிரிவு கம்போடிய ட்ரோன் ஒன்றின் சத்தத்தைக் கேட்டபோது இந்தச் சம்பவம் தொடங்கியது.

 பின்னர், ராக்கெட் எறிகணை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆறு கம்போடிய வீரர்கள் தாய் நிலையத்தின் முன்புறமுள்ள முள்வேலிக்கு அருகில் வந்தனர். தாய்லாந்து வீரர்கள் அவர்களை எச்சரிக்கை செய்தனர், ஆனால் காலை 8:20 மணியளவில், கம்போடியப் படைகள் கோயிலின் கிழக்குப் பகுதியை நோக்கி, தாய் தளத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். "இந்த நிலைமை கவனமாகக் கையாளப்பட வேண்டும், மேலும் சர்வதேச சட்டத்தின்படி நாம் செயல்பட வேண்டும்" என்று தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் ஃபும்தம் வெச்சயாச்சாய் கூறினார். "எங்கள் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று அவர் கூறினார்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

தூதரக உறவுகள் முறிவு

மே மாதம் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததற்கு கம்போடியா புதிதாக புதைத்த கண்ணிவெடிகளே காரணம் என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர். கம்போடியா இதனை மறுத்துள்ளது. இந்த வெடிப்பு கம்போடியாவின் பிரே விகார் மாகாணத்தில் நடந்ததாகக் கூறியுள்ளது. தாய்லாந்து, கம்போடியா மீது கண்ணிவெடிகள் எதிர்ப்பு ஒட்டாவா ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. பல கண்ணிவெடிகள் கடந்த காலப் போர்களின் எச்சங்கள் என்று கம்போடியா கூறுகிறது.

நீண்டகால மோதல்

தாய்லாந்து ராணுவ ரோந்துப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் கண்ணிவெடியில் காயமடைந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து கம்போடிய தூதரை வெளியேற்றியது. அதன் தூதரைத் திரும்பப் பெற்றது. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கம்போடியா புதிய கண்ணிவெடிகளைப் புதைத்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாக வெச்சயாச்சாய் கூறினார். வியாழக்கிழமை காலை, கம்போடியா தனது தூதரக உறவுகளை "மிகக் குறைந்த மட்டத்திற்கு"க் குறைப்பதாக அறிவித்தது. தனது தூதர்களைத் திரும்பப் பெற்று, தாய்லாந்து தூதர்களை வெளியேற்றியது.

எல்லை மூடல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் சிதைவு

சமீபத்திய வாரங்களில் இரு தரப்பினரும் பதிலடி கொடுத்தனர். தாய்லாந்து எல்லைக் கடப்புகளைக் கட்டுப்படுத்தியது. கம்போடியா சில இறக்குமதிகளை நிறுத்தியது. கண்ணிவெடி வெடிப்பில் ஒரு வீரர் தனது காலை இழந்ததாகவும், மற்றவர்கள் காது காயங்கள் மற்றும் மார்பு வலியால் பாதிக்கப்பட்டதாகவும் தாய் ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதன்கிழமை இரவு கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தாய்லாந்து கூறிய "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை" "முற்றிலும் நிராகரித்தது". எல்லைப் பகுதிகளில் இன்னும் "கடந்த காலப் போர்களில் இருந்து எஞ்சியிருக்கும் பல கண்ணிவெடிகள்" முழுமையாக அகற்றப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.