ரஷ்யாவின் கிழக்கு அமுர் பகுதியில் 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் மாயமாகியுள்ளது. சீன எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம், இலக்கை அடைய சில கிலோமீட்டர்கள் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் மாநிலம் அமகதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைந்த நிலையில் 240 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் 50 பேருடன் சென்ற விமானம் ஒன்று மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு அமுர் பகுதியில் சுமார் 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் சீன எல்லையில் உள்ள அமுர் பகுதியில் உள்ள டைண்டா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமானம் தனது இலக்கை அடைய சில கிலோமீட்டர்கள் மட்டுமே இருந்தபோது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்பை கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா? என்பது குறித்து அறிய மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனிடையே ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த 50 கதி என்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.