எல்லை மீறும் தாலிபான்கள் அட்டூழியம்... நார்வே தூதரகத்திற்குள் நுழைந்து என்ன செய்தார்கள் தெரியுமா..?
ஆப்கானிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகி வருகிறது.
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. தற்போது அரசமைப்பதில் தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளை தலிபான்களின் பழமைவாத கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் அச்சத்தில் உள்ள ஒரு பகுதி மக்கள், அவர்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆப்கானிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகி வருகிறது.
இந்நிலையில், காபூலில் இருக்கும் நார்வே நாட்டுத் தூதரகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான், பல அட்டூழியங்களை அங்கு நிகழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிக்வால்டு ஹாக், ’'தலிபான்கள், தற்போது காபூலில் இருக்கும் நார்வே தூதரகத்தைக் கைப்பற்றியுள்ளனர். எங்கள் நாட்டுத் தூதரகத்தை மீண்டும் ஒப்படைப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கிருக்கும் ஒயின் பாட்டில்களை உடைத்துள்ளனர். சிறுவர்களுக்கான புத்தகங்களை அழித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை துப்பாக்கிகள் மிக ஆபத்துக் குறைவானவை போல' என்று பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அதனை மீறியுள்ளனர்.