Asianet News Tamil

உடலில் இந்த வைட்டமின் மட்டும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!! உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!

கோவிட் -19 ஐத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. இருப்பினும், தொற்றுநோய் காலங்களில் வைட்டமின் டியால் பல நன்மைகள் இருப்பதாக வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

Take care not to deplete only this vitamin in the body World researchers warn
Author
Delhi, First Published Jul 17, 2020, 7:10 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா வைராஸ் காரணமாக பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சிலர் வெளியில் வந்தாலும் காலையிலேயோ அல்லது மாலையிலேயோதான் வெளியில் வருகின்றனர்.  இப்படி வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பல ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி இருப்பதன் மூலம் குறிப்பாக உடலில் வைட்டமின் டி குறைவு ஏற்படுகிறது. சூரிய ஒளி போதுமான அளவு உடலுக்கு கிடைப்பது தடைபடுவதே அதற்கு காரணம். சூரிய ஒளியே வைட்டமின் டிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) வாதவியல் துறையில் எச்.ஓ.டி டாக்டர் உமா குமார், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதில் வைட்டமின் டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக எலும்புகளை வலிமையாக்குகிறது. உடலின் மற்ற அனைத்து அமைப்புகளையும் சரியாக இயக்குவதில் வைட்டமின் டி மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. எனவே, வைட்டமின் டி குறைபாடு நம் உடலில் ஏற்படாதவாரு நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக வைட்டமின் டி க்கான சப்ளிமெண்டரி மாத்திரைகளை ஒருபோதும் சுயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே அதை செய்ய வேண்டும்.

 

காரணம் வைட்டமின் டி உடலில் அதிகமாகும் பட்சத்தில் அது இருதய செயலிழப்புக்கு வழி வகுக்கும் ஆபத்து உள்ளது என டாக்டர் உமா எச்சரித்துள்ளார்.  உடலில் அதிக அளவு வைட்டமின் டி இருப்பதால், கால்சியம் அளவு அதிகரிக்கிறது, இது இதயம் செயலிழக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது, எனவே ஒருபோதும் சப்ளிமெண்ட்டரி மாத்திரைகளை எடுக்க முயற்சிக்காதீர்கள் என அவர் எச்சரிக்கிறார். வைட்டமின்கள் உடலுக்கு மற்ற கூறுகளைப் போலவே முக்கியம். எனவே அதை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தவது அவசியம். ஆனால் அதற்காக அதிகம் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறுகிறார். உடலில் வைட்டமின் டி போதுமான அளவு கிடைப்பதன் மூலம் பொதுவான சளி மற்றும் காய்ச்சலைத் தவிர்க்கலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும்  ஊட்டச்சத்து அறிவியல் ஆலோசனை ஆணையம் மற்றும் தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம், கொரோனாவில் வைட்டமின் டியின் பங்கு பற்றிய அறிக்கைகளை தயாரித்துள்ளது. அதில் தொற்றுநோய்களின் இந்த காலகட்டத்தில், மக்கள் ஒவ்வொரு நாளும் 10 மைக்ரோகிராம் வைட்டமின்களை உட்கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது. குறிப்பாக, வீட்டிற்குள் அதிகமாக முடங்கியிருப்பவர்கள் ஆண்டு முழுவதும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க பரிந்துரைக்கிறது. வெளியே செல்ல முடியாதவர்கள் அல்லது பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு, வைட்டமின் டி தனித்தனியாக எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

அதே போல் வடக்கு அயர்லாந்தின் பொது சுகாதார நிறுவனமும் ஊரடங்கு காலத்தில் இதே போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளது.வைட்டமின் டி மற்றும் கொரோனா இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும்,  வைட்டமின் டி கொரோனாவிற்கான சிகிச்சை அல்ல என்றும் டாக்டர் உமா கூறுகிறார். ஆனால் வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள், நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட சமூக அடிப்படையிலான ஆய்வுகளின்படி, நாட்டில் சுமார் 50 முதல் 90% மக்களுக்கு வைட்டமின்கள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் டி பற்றிய ஆராய்ச்சியின் மறுஆய்வில், சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்புக்கான தேசிய நிறுவனம், வைட்டமின் டி சப்ளிஷன் மூலம் கோவிட் -19 ஐத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. இருப்பினும், தொற்றுநோய் காலங்களில் வைட்டமின் டியால் பல நன்மைகள் இருப்பதாக வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே இது உடலில் குறைய விடக்கூடாது என எச்சரிக்கின்றனர்.  பி.எம்.ஜே ஊட்டச்சத்து, தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தின் அறிக்கையின்படி, வைட்டமின் டி குறிப்பிட்ட விஷயங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், ஆனால் கோவிட் -19 க்கு சிகிச்சையாக அல்ல. ஆனால், வைட்டமின் டி நம் உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும்.

ஒரு நபர் வைட்டமின் டி குறைபாட்டுடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர் குணமடைவது கொஞ்சம் கடினம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு ஆய்வின்படி, வைட்டமின் டி கொரொனா வைரஸ் தொற்று அபாயத்தையும், அமிலேட் மற்றும் சைட்டோகைன் ஸ்ட்ரோமில் கோவிட் -19 இன் அறிகுறிகளையும் குறைப்பதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் 20 நாடுகளில் வைட்டமின் டி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மக்கள் குறைந்த அளவு வைட்டமின் டி உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் அதிகமாகக் காணப்படுவது கண்டறியப்பட்டது, அங்கு இறப்புகளும் அதிகம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் வைட்டமின் டி குறைபாடு கொண்டிருந்தனர்.780 கோவிட் -19 நோயாளிகளை ஆய்வு செய்த இந்தோனேசிய ரெட்ரோஸ் பெக்டிவ் சார்ட் ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள், வைட்டமின் டி அளவு சாதாரண அளவை விட கணிசமாக குறைவாக இருப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்தியதை கண்டறிந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios