அமெரிக்கா: சுதந்திர தினத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது

அமெரிக்காவின் சிகாகோவின் புறநகரில் சுதந்திர தின பேரணி நடந்து கொண்டு இருக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதியதாக சந்தேகப்படும் 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி இருந்தனர். 36 பேர் காயம் அடைந்து இருந்தனர்.

Suspect in Highland park gun shooting in Chicago arrested

அமெரிக்காவின் சிகாகோவின் புறநகரில் சுதந்திர தின பேரணி நடந்து கொண்டு இருக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதியதாக சந்தேகப்படும் 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி இருந்தனர். 36 பேர் காயம் அடைந்து இருந்தனர்.


போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராபர்ட் இ கிரிமோ III என்று தெரிய வந்துள்ளது. இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

காருக்குள் இருந்தவரை போலீசார் கைது செய்ய சென்றபோது கிரிமோ காரில் இருந்து கைகளை தூக்கியவாறு இறங்கி தரையில் படுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த எட்டு மணி நேரத்தில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிகாகோ நகரின் புறநகரில் இருக்கும் ஹைலேண்ட் பார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிரிமோ. இவர் பெல்வேறு பெயர்களில் யூ டியூப் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோக்களில் சிலவற்றில் நண்பர்களுடன் சுற்றுவதைப் போலவும், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபடுவது போன்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!

ஹைலேண்ட் பார்க் பகுதியில் இந்தப் பேரணி நடந்தது. திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மக்கள் நிலைகுலைந்து தடுமாறி நான்கு திக்கும் ஓடினர். குழந்தைகள் அலறி அடித்து பெற்றோரை தேடிச் சென்றனர். கைகளில் கொண்டு வந்து இருந்த பொருட்களையும் ஆங்காங்கே வீசிச் சென்றனர். சுதந்திர தினத்தில் நடந்த இந்த சோக சம்பவம் அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு விசா... டார்கெட் இவங்க மட்டும் தான்.. இலங்கை அதிரடி..!

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  விடுத்திருந்த அறிக்கையில், ''இந்த சம்பத்தை பார்த்து நானும் எனது மனைவி ஜில்லும் அதிர்ச்சி அடைந்தோம். சுதந்திர நாளில் மீண்டும் ஒரு சோகத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios