விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்! பூமி திரும்புவது எப்போது? போயிங் ஸ்டார்லைனருக்கு என்ன ஆச்சு?
விண்வெளி ஆய்வாளர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதே விண்வெளி மையத்தில் 52 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ளனர். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. போயிங் ஸ்டார்லைனரில் அடுத்து பிரச்சனைகள் வந்துகொண்டே இருப்பதால் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தேதியை இன்னுமும் நாசா அறிவிக்கவில்லை.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 52 நாட்களைக் கடந்து விண்வெளியில் தங்கியிருந்து வருகின்றனர். அவர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வர வேண்டிய போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டு உந்துவிசை பிரச்சனையை காரணமாக சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் அடுத்தடுத்து காலதாமதம் ஏற்படுகிறது. நாசா விஞ்ஞானிகளும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், சுனிதா மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்ப காத்திருக்கின்றனர்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு 10 நாட்கள் தங்குவதற்கு திட்டமிடப்பட்டு, இருவரும் கடந்த ஜூன் 5 அன்று போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் புறப்பட்டனர், வெற்றிகரமாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் துள்ளள் நடனத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து ஸ்டார்லைனர் விமானத்தின் உந்துவிசை அமைப்பில் உள்ள பல சிக்கல்கள் அவர்கள் திரும்பும் தேதியை காலதாதப்படுத்தி வருகிறது.
ஸ்டார்லைனரின் 28 வாழ்வு உந்துதல்களில் ஐந்து நிலையத்திற்கு மேல் அவை இயங்கவில்லை என்றும், ஒரு உந்துவிசை வால்வு சரியாக மூடப்படவில்லை மற்றும் ஐந்து ஹீலியம் கசிவுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடத்தனர். தொடர்ந்து, நாசா அதிகாரிகளும் போயிங் பொறியாளர்களும் ஸ்டார்லைனரில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான தீர்வு இன்னும் முடிந்தபாடில்லை.
டார்க் ஆக்ஸிஜன் என்றால் என்ன? ஆழ்கடலில் 13,000 அடி ஆழத்தில் என்ன நடக்குது? விஞ்ஞானிகள் ஆச்சரியம்!
.ஆகஸ்டில் பூமிக்கு திரும்புவர்!
போயிங் ஸ்பேஸின் எக்ஸ் தளத்தில் முக்கி அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், போயிங்கின் ஸ்டார்லைனர் குழு தரைவழி சோதனை மற்றும் ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் த்ரஸ்டரின் தரவு உள்ளின்ன சோதனைகளை முடித்திருப்பதால், நாசா விண்வெளி வீரர்கள் விரைவில் பூமிக்குத் திரும்பலாம் என கூறியுள்ளனர். அடுத்த வாரம் விமான சோதனை தயார்நிலை மதிப்பாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் முழுமையான சாத்தியமான வாய்ப்புகளுடன் தரையிறங்கும் தேதி திட்டமிடப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டார்லைனர் திட்ட மேலாளரும் துணைத் தலைவருமான Mark Nappi கூறுகையில், "குழுவை மீண்டும் அழைத்து வர எங்களிடம் ஒரு நல்ல வாகனம் உள்ளது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஜூலை இறுதிக்குள் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்ப முடியும் என்று நாசாவின் வணிகக் குழு திட்ட இயக்குனர் உறுதியளித்தார், ஆனால் திரும்பும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நாசா அதிகாரிகளின் கூற்றுப்படி, ஸ்டார்லைனரில் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் திரும்புவது இந்த சோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தது என்றார்.
Diamonds in the Sky|10 மைல் அளவிற்கு வைரத்தால் சூழப்பட்ட புதன் கிரகம்! கிட்ட நெருங்க முடியாமல் தவிக்கும் நாசா!
சுனிதா வில்லியம்ஸ் & புட்ச் வில்மோர் கருத்து!
இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்புவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். "இந்த விண்கலம் நம்மை வீட்டிற்கு கொண்டு செலும் எந்த பிரச்சனையும் இல்லை" என்று வில்லியம்ஸ் கூறியுள்ளார். "நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று புட்ச் வில்மோர் தெரிவித்துள்ளார்.
Nepal Plane Crash: நேபாளம் விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!