கொரோனோவை விரட்டியடிக்க 6,000 கோடியை வாரி வழங்கும் பச்சைத்தமிழன்... அசாதாரண நேரத்தில் அசாத்தியம்..!

உலகில் உள்ள பில்லியனர்கள் பலர் இந்த அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையில் உலக சுகாதாரத் துறைக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். 

sundar pitchai rs 6000 crores to resist covid 19 impact

உலக முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகள் மருந்து தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை உட்பட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனையடுத்து, உலகில் உள்ள பில்லியனர்கள் பலர் இந்த அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையில் உலக சுகாதாரத் துறைக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். sundar pitchai rs 6000 crores to resist covid 19 impact

இப்போது சுந்தர் பிச்சையின் ஆல்ஃபபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை சுகாதார நிறுவனங்கள், சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் COVID-19 ற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க போராடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு தர இருப்பதாக கூறியுள்ளது. 

இந்த 800 மில்லியன் டாலர்கள் என்பது பணம், ஆட் கிரெடிட் மற்றும் க்ளௌடு சேவை மூலமாக வழங்கப்படும் என்பதை ஆல்ஃபபெட் நிறுவனத்தின் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உறுதி அளித்துள்ளார். கொரோராவிற்கு எதிராக நம்மை காத்து வரும் சுகாதார நிறுவனங்கள் அதாவது உலக சுகாதார நிறுவனம் மற்றும் நூற்றிற்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்களுக்கு ஆட் கிரான்ட்ஸ் மூலமாக 250 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளது ஆல்ஃபபெட் நிறுவனம். sundar pitchai rs 6000 crores to resist covid 19 impact

மேலும் 340 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இலவச விளம்பரங்களை கூகுள் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இது போன்ற கஷ்ட காலத்தில் வழங்க உள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு 20 மில்லியன் டாலர்களை கிளௌடு சேவைகள் மூலம் கொடுக்க உள்ளார். இதனை பயன்படுத்தி கொரோனா வைரஸுக்கு  ஒரு நல்ல முடிவை கொண்டு வரலாம்.

இது மட்டும் இல்லாமல் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோரின் நன்கொடைகளை சேர்த்து முடிந்த வரையில் 10,000 மில்லியன் டாலர்களையும் வழங்குவதாக ஆல்ஃபபெட் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சுகாதார துறைகள் தற்போது மேற்கொண்டு வரும் முக கவசம், கை உறை போன்ற மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை சமாளிக்கவும் அந்நிறுவனம் உதவி வருகிறது.sundar pitchai rs 6000 crores to resist covid 19 impact

வென்டிலேட்டர்களின் தயாரிப்பை அதிகரிக்க ஆல்ஃபபெட்டின் கூகுள் வெரிலி மற்றும் X இன்ஜினியர்களை வழங்கி உள்ளது. இது பற்றி சுந்தர் பிச்சை கூறுகையில்,”நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரக்கூடிய சவாலை எதிர்கொள்வோம். தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ துறைகளுக்கு உதவி செய்வோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios