நிறைமாத கர்ப்பிணியின் பிரமிக்க வைக்கும் நடனம்...! வைரலாக பரவும் வீடியோ...!
நிறைமாத கர்ப்பிணி ஒருவர், மிகவும் நளினமாக போல் டான்சிங் (Poll Dancing) ஆடும் வீடியோ, இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு உடற்பயிற்சிப்போல் தினமும போல் நடனம் செய்து வருவதாக அந்த பெண் கூறி வருகிறார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தைச் சேர்ந்தவர் ஆலிசான் ஸ்பஸ். நடனக் கலைஞரான ஆலிசான், தற்போது 9 மாத கிர்ப்பிணியாக உள்ளார். ஆர்லாண்டோவில் உடற்பயிற்சி மற்றும் நடனம் பயிற்றுவிப்பாளராக ஆலிசான் பணிபுரிந்து வருகிறார்.
'போல்' நடனம் ஆடுவதில் திறமையானவர் இவர், கர்ப்பக்காலத்திலும் நடனம் ஆடுவதை நிறுத்தவில்லை. போல் டான்சிங் பயிலும் வீடியோ ஒன்றை ஆலிசான், தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவரது இந்த வீடியோ, உலகளவில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவரால் மட்டும் இவ்வளவு நளினமாக எப்படி நடனம் ஆட முடிகிறது என்று இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் தங்களுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ, கர்ப்பக்காலத்தின்போது, இதுபோன்ற ஆபத்தான முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும், இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர்.
போல் நடனத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஆலிசன், நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது என்கிறார். நான் தினமும் மேற்கொள்ளும் ஃபிட்னஸ் பயிற்சிகளை நிறுத்தவில்லை என்றும், போல் நடனத்தை தினமும் உடற்பயிற்சிபோல் செய்து வருகிறேன் என்றும் ஆலிசன் கூறியுள்ளார்.