‘Storm-Z': உக்ரைனில் போரிட அனுப்பப்பட்ட ரஷ்யாவின் தற்கொலைப் படைகள் பற்றி தெரியுமா?

உக்ரைன் மீதான போருக்கு பிறகு, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ரகசிய இராணுவக் குழுக்கள் பற்றிய பல தகவல்கள் வெளிவந்த வண்னம் உள்ளன.

Storm Z : Did you know about Russia's suicide squads sent to fight in Ukraine? Rya

சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கும் ரஷ்யாவின் இராணுவ விவகாரங்களைப் பற்றி வெளி உலகத்திற்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில், பிப்ரவரி 24, 2022 அன்று 'சிறப்பு இராணுவ நடவடிக்கை' என்ற பெயரில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கிய பிறகு, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ரகசிய இராணுவக் குழுக்கள் பற்றிய பல தகவல்கள் வெளிவந்த வண்னம் உள்ளன. குறிப்பாக வார்னர் குழு உட்பட தனியார் இராணுவக் குழுக்களும் இதில் அடங்கும்.

ஆனால் இந்த தகவல்களை, ரஷ்யா ஒருபோதும் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள் ரஷ்ய இராணுவத்தின் கீழ் 'Storm-Z' என்ற புனைப்பெயர் கொண்ட உயரடுக்கு வீரர்கள் இருப்பதாகக் கூறுகின்றன. Storm-Z என்பது ரஷ்ய படைகளால் பயன்படுத்தப்படும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற சொல் ஆகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே நிலைநிறுத்தப்பட்ட இராணுவப் பிரிவு எண்-40318-ஐச் சேர்ந்த ஒரு சாதாரண வீரர் சொன்ன தகவலை அடுத்து, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரஷ்யாவின் இந்த ராணுவ பிரிவு வெளிச்சத்திற்கு வந்தது.  இந்த  Storm-Z ராணுவ குழு தான் இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் இருந்து உக்ரைனில் போரில் முன்னணியில் உள்ளது என்று கூறப்படுகிறது.

'மேலும் இந்த ராணுவக் குழு தண்டனை பட்டாலியன் என்றும் அழைக்கப்படுகிறது. Storm Zed என்பது நூற்றுக்கணக்கான இராணுவ மற்றும் சிவிலியன் குற்றவாளிகளின் குழுவாகும். அவர்கள் சாதாரண வீரர்களை விட மலிவான போராளிகளாக கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது. இந்த பிரிவுகள் மிகவும் ஆபத்தான பகுதிகளில் சண்டையிடுகின்றன. மேலும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அகழிகளுக்கு மேல் அனுப்பப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தில் பணியில் இருக்கும் போது மது அருந்தியது, போதைப்பொருள் பயன்படுத்தியது,, கட்டளைகளை மீறியது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் Storm-Z  ராணுவ பிரிவுக்கு மாற்றபடுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது சர்வதேச போர்ச் சட்டமான ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானது என்றும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுகுறித்து ராணுவ வீரர் ஒருவர் பேசிய போது “ பணியில் இருக்கும் அவரிடம் இருந்து ஆல்கஹால் வாசனை வந்தால் அவர்கள் உடனடியாக அவர்களை Storm-Z படைகளுக்கு அனுப்புகிறார்கள். ரஷ்ய இராணுவச் சட்டத்தின்படி, இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே ஒரு ராணுவ தண்டனைப் பிரிவுக்கு மாற்றப்பட முடியும், ஆனால் ஒரு Storm-Z போராளி தனக்கு நீதிமன்ற விசாரணைகள் நடப்பது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.

மற்றொரு ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோவில் "முன் வரிசையில், நாங்கள் இருந்த இடத்தில், எங்களுக்கு வெடிமருந்துகள் வழங்கப்படவில்லை. எங்களுக்கு தண்ணீர் அல்லது உணவு கிடைக்கவில்லை. காயமடைந்தவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை: இப்போதும் இறந்தவர்கள் அழுகிய நிலையில் உள்ளனர். எங்களுக்கு பயங்கரமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவை நடைமுறைப்படுத்த முடியாதவை. இந்தப் போர்ப் பணிகளைத் தொடர நாங்கள் தயாராக இல்லை.” என்று தெரிவித்தார்.

" மிகவும் புத்திசாலி.. ” பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர் புடின்..!

எனினும் இந்த ராணுவ குழுக்கள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதால் செலவு குறைவு. மேலும் Storm-Z வீரர்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனாலும் இந்த பிரிவுகளில் மொத்தம் எத்தனை வீரர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை. பல நூறு பேர் இந்த குழுவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios