" மிகவும் புத்திசாலி.. ” பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர் புடின்..!
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டி உள்ளார். மோடியை மிகவும் புத்திசாலி" என்று புடின் அழைத்ததாக ரஷ்யாவை தளமாகக் கொண்ட ஊடகமான RT தெரிவித்துள்ளது. இந்தியா வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்றும் புடின் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய புடின், சைபர் கிரைமுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மேலும் ஒத்துழைக்கும் நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய புடின், "பிரதமர் மோடியுடன் நாங்கள் நல்ல அரசியல் உறவைப் பகிர்ந்து கொள்கிறோம்; அவர் மிகவும் புத்திசாலி. மேலும் அவரது தலைமையில் இந்தியா வளர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியா தலைமையில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்ததை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவின் இந்த சாதனையை "மைல்கல்" என்று குறிப்பிட்டு அதை ரஷ்யா, G20 நாடுகளை இருந்து "ஒருங்கிணைப்பதில்" இந்தியாவின் ஜி20 தலைமையின் ங்கையும் ரஷ்யா பாராட்டியது.
பிரதமர் மோடியை புடின் பாராட்டுவது இது முதன்முறையல்ல. கடந்த மாதம், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் பிரதமர் மோடி சரியானதை" செய்கிறார் என்று கூறினார். 8 வது கிழக்கு பொருளாதார மன்றத்தில் (EEF) ரஷ்ய தயாரிப்பு கார்கள் குறித்த ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது புடின் இந்த கருத்தை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான அம்பேத்கர் சிலை; அமெரிக்காவில் அக். 14ஆம் தேதி திறக்க ஏற்பாடு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தனது கொள்கைகளின் மூலம் ஏற்கனவே முன்மாதிரிகளை அமைத்துள்ளது என்றும் புடின் கூறினார். "...இந்த விஷயத்தில், நமது பல நண்பர்களிடமிருந்து, அதாவது இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மற்றும் கப்பல்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றனர். மேலும் இது சம்பந்தமாக, பிரதமர் மோடி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிராண்டைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது மிகச்சரியான நடிவடிக்கை. அந்த வாகனங்களும் நம்மிடமும் உள்ளன, அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..." என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.