பதவி விலகல் விவகாரம்… புதிய நிபந்தனைகளை முன்வைத்த கோட்டாபய ராஜபக்சே!!
எதிர்பாராத திருப்பமாக, தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலகப் போவதில்லை என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத திருப்பமாக, தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலகப் போவதில்லை என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். முன்னதாக பொருளாதாரத்தை காப்பாற்ற தவறிய அரசை கண்டித்து இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள் அது கலவரமாக மாறியது. இதனிடையே அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது. இலங்கை அரசு ஊழியர்கள், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புத்த மத குருக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதை அடுத்து பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன.
இதையும் படிங்க: அமெரிக்கா தப்பிச் செல்ல முயற்சித்த கோத்தபாய ராஜபக்சே… விசா வழங்க அமெரிக்கா மறுப்பு!!
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியானது. ஆனால் அதிபர் கோட்டபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை. கோட்டபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று கோட்டபய ராஜபக்சே அமெரிக்கா தப்பி ஓட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு செல்ல அவசர விசா கோரியிருந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சேவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது.
இதையும் படிங்க: துபாய் தப்பி ஓட முயற்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு: கைது செய்யப்படுகிறாரா?
இந்த நிலையில் தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வரை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னர், ஜூலை 13ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அதுக்குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது. ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவதற்கு முன்பு தானும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோட்டபய ராஜபக்சே நாளை பதவி விலகாவிட்டால் கொழும்பில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே வரும் 16 ஆம் தேதி விலகுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.