Srilanka passenger spreading hoax in flight
“வானில் பறக்கும்போது இலங்கை பயணி பரப்பிய வெடிகுண்டு புரளி…” - பாதியில் தரையிறங்கிய விமானம்…!!!
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பர்ன் நகர் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், அதில் பயணம் செய்த பயணியிடம் வெடி குண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதனால், உடனே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் ஏறி தீவிரமாக சோதனை நடத்தினர். அதில், இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறக்கி ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர், அதில் குறிப்பிட்ட நபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும் அவர் மது அரூந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்து, தனி அறையில் வைத்து விசாரித்தனர்.
அதில், விமானத்தில் மது அருந்திய அவர், இலங்கையை சேர்ந்தவர். அங்கு பணியில் இருந்த விமான பணி பெண்களிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர், விமானியின் அறைக்கு செல்ல முயன்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமைடந்த அவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை கடத்த திட்டமிட்டு, அதில் பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரை தீவிரமாக சோதனை செய்தபோது, செல்போன் சார்ஜ் செய்யும் பவர் பேங்க் மட்டும் இருந்தது.
இதை தொடர்ந்து போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர், விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட மற்ற பயணிகளை, மீண்டும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
