sri lanka economic crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சபாநாயகர் திடீர் எச்சரிக்கை
இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்ச விரைவில் ராஜினமா கடிதத்தை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், வேறு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும் என்று இலங்கை சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்ச விரைவில் ராஜினமா கடிதத்தை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், வேறு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும் என்று இலங்கை சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் தொலைப்பேசியில் பேசிய சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனா, புதன்கிழமை நள்ளிரவுக்குள் முன்பாக, ராஜினாமா கடிதத்தை அனுப்பி வையுங்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை ராஜினாமா கடித்ததை அதிபர் கோத்தபய ராஜபக்ச அளிக்கவில்லை.
கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதில் சிக்கல்
இலங்கையில் உள்ள நியூஸ்பர்ஸ்ட் லங்காவுக்கு யபாஅபேவர்தனா அளித்த பேட்டியில், “ கோத்தபய ராஜபக்சவிடம் நேற்று பேசினேன். அப்போது அவரிடம் நள்ளிரவுக்கு முன்பாக ராஜினாமாகடிதத்தை அனுப்பி வையுங்கள். இங்கு நெருக்கடி நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. நீங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பாவிட்டால், வேறு முடிவை நாட வேண்டியதிருக்கும் எனத் தெரிவித்தேன். ஆனால், இதுவரை ராஜினாமா கடிதம் வரவில்லை” எனத் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில் “இதுவரை கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடித்ததை வழங்கவில்லை. இதனால், வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படுவதில் உறுதியற்ற நிலை இருக்கிறது” எனத் தெரிவித்தார்
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா
இதற்கிடையே தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசங்கே, சபாநாயகர் அபேவர்த்தனாவிடம், அரசும்,எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொண்ட ஒரு நபரை தற்காலிகமாக பிரதமராக நியமியுங்கள் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதாரம் அழிவு நிலைக்குச் சென்றுவிட்டது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகளை சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துவிட்டது. கடந்த 3 மாதங்களாக நடக்கும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் விலகினார்.
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு… இலங்கை போராட்டத்திற்கு மத்தியில் காதல் ஜோடி செய்த செயல் வைரல்!!
அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கடந்த 9ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி உள்ளே சென்றனர். ஆனால், கோத்தபய ராஜபக்ச, ராணுவ தலைமை அலுவலகத்துக்கு தப்பினார்.
இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரமடைந்ததைப் பார்த்த கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து புதன்கிழமை(நேற்று) விலகுவதாகத் தெரிவித்தார். ஆனால், திடீரென அதிபர் கோத்தபய ராஜபக்ச தனி விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இலங்கையில் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 84 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.