கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதில் சிக்கல்
இலங்கை அதிபர் ராஜினாமா செய்யாமல் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் தயாராகி வருகிறார். நேற்றிரவே சிங்கப்பூர் சென்று இருக்க வேண்டிய அவர் இன்னும் மாலத்தீவில் தங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே இன்னும் ராஜினாமா செய்யாமல் அந்த நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவுக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது. சிங்கப்பூர் சென்ற பின்னர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மாலத்தீவில் தங்கி இருக்கும் கோத்தபய நேற்றிரவே சிங்கப்பூர் செல்வதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் அவர் செல்லவில்லை என்பதை டெய்லி மிரர் உறுதி செய்துள்ளது. தனியார் விமானத்தின் மூலம் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதாரம் மிகவும் சீரழிந்துள்ளது. மக்கள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணவீக்கம் அதிகரித்து விலைவாசி விண்ணை முட்டியுள்ளது. மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். பெட்ரோல் வாங்குவதற்கு பணம் இல்லாமல், வேலைக்கு செல்லும் இடங்களிலேயே தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களின் உக்கிரமான போராட்டத்துக்குப் பின்னர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டே தற்போது வெளியேறியுள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு தனது மாளிகையில் இருந்து வெளியேறி கடல்மார்க்கமாக, ராணுவ மையத்திற்கு சென்று தங்கினார். அங்கிருந்து தற்போது மாலத்தீவில் மனைவி லோமாவுடன் தஞ்சம் அடைந்துள்ளார். அவருடன் இரண்டு பாதுகாவலர்களும் சென்று உள்ளனர்.
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு… இலங்கை போராட்டத்திற்கு மத்தியில் காதல் ஜோடி செய்த செயல் வைரல்!!
இன்னும் அதிபர் பதவியை கோத்தபய ராஜினாமா செய்யவில்லை. சிங்கப்பூர் சென்ற பின்னர் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. நேற்று காலை ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இன்று காலை அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபர் பொறுப்பையும் என்று ஏற்றுக் கொண்டார். இவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து இன்று 97வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?