crisis is sri lanka: இலங்கையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்: இந்தியத் தூதரகம் திடீர் எச்சரிக்கை
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். வெளியே செல்வதற்கு முன் நன்கு திட்டமிட்டு செல்லுங்கள் என்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். வெளியே செல்வதற்கு முன் நன்கு திட்டமிட்டு செல்லுங்கள் என்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியத் தூரகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று திடீரென அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இ்ந்த சம்பவத்தையடுத்து இந்தியத்தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இ்ந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கைப் போலீஸார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
இலங்கையின் பிரதமராகிறாரா சஜித் பிரேமதாசா? உடைந்தது ராஜபக்சே கட்சி!!
இலங்கையில் பொருளாதாரச் சீரழிவும், அமைதியற்ற சூழலும் நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குப்பின், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் பதவிவிலகினர். இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போட்டியில் 4வது சுற்றில் ரிஷி சுனக் முன்னிலை; வெற்றி பெறுவாரா?
புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுவதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையின் சூழல் அமைதியற்றதாகவும், ஒருவிதமான பதற்றத்துடனே இருந்து வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியத்தூதரகம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ இலங்கை, இந்திய மக்களிடையேயான உறவு இணக்கமாகவும், நட்புடனே இருந்து வருகிறது. தற்போதுள்ள சூழலில், இலங்கையில் வாழும் இந்திய மக்கள், சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிந்திருப்பார்கள். ஆதலால், எந்த இடத்துக்குச் செல்லும் திட்டமிட்டு செல்லுங்கள், பாதுகாப்பாக இருங்கள். தேவைப்பட்டால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.
மற்றொரு ட்விட்டர் பதிவில் இந்தியத் தூதரகம் வெளியிட்ட கருத்தில் “ இந்திய விசா மையத்தின் இயக்குநர், இந்தியர் விவேக் வர்மா, கொழும்பு அருகே அடையாளம் தெரியாதவர்களால் நேற்று இரவு தாக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய சூரிய காந்தப் புயல் இன்று பூமியை தாக்குகிறது: என்ன பாதிப்பு ஏற்படும்?
இந்திய அதிகாரி தாக்கப்பட்டது குறித்து இலங்கை போலீஸாருக்குத் தெரிவி்க்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள்