Sri lanka Emergency : இலங்கையில் மக்கள் கிளர்ச்சி - அவசர நிலை பிரகடனம் அமல்!

இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 

Sri Lanka declares state of emergency by PM office

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் உணவின்றியும், எரிபொருட்கள் இன்றியும் தவித்து வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசைக் கண்டித்து மக்கள் போரட்டம் வெடித்த நிலையில், அண்மையில், அதன் உச்சகட்டமாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர்.  மேலும் பிரதமரின் தனி வீட்டையும் முற்றுகையிட்டு தீவைத்தனர். 

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலத்தீவுக்கு தப்பிச்சென்றுவிட்டார். இதேபோல், பிரதமர்  ரணில் விக்ரமசிங்கேவும் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், பிரதமர் அலுவலகம் இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து,  இலங்கை பங்குச்சந்தை மூடப்பட்டது. நாட்டின் நிலைமை சீராகும் வரை பங்குச் சந்தை செயல்பாடுகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sri Lanka: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்!!

மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி, மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இலங்கையின் அடுத்த இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதசா நியமிக்கபடுவார் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி., அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே; மக்கள் கொந்தளிப்பு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios