தமிழர்களை அவமானப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்..!! தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் எனவும் விமர்சனம்..!!
விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்த போது தேவையில்லாமல் பிரிவினைவாதம் பேசி அரசை எதிர்த்ததன் காரணமாக பல உயிர்கள் பலியாகின. நாட்டில் ரத்த ஆறு ஒடியது, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் இனி ரத்த ஆறு ஓடாது என்பதால் மகிழ்ச்சியடைந்தேன்.
அரசியல் தனிநாடு என்று கோராமல் தங்கள் பிள்ளைககளை படிக்க வைக்கும் வேலைகளில் கவனம் செலுத்துங்கள் என இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் விடுதலைப்புலிகளை மிகத் தவறாக விமர்சித்து உலக அளவில் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் அவர் தமிழர்களை மட்டம்தட்டும் வகையில் பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர் தமிழர்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது அவர்களின் தாழ்வு மனப்பான்மைதான் காரணம். அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றனர். தேசிய நீரோட்டத்திற்குள் வராமல் பிளவுபட்டு நிற்பதிலேயே அவர்களின் மனப்போக்கு உள்ளது இதனால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புக்கள் இன்றி, அவர்கள் மோசமான நெருக்கடிகளை சந்திக்கும் சூழலுக்கு ஆளாகி வருகின்றனர். தேவையில்லாமல் அரசியல், பிரிவினைவாதம், தனிநாடு கோரிக்கைகள் என அவர்கள் இருப்பதனால் பலன் ஒன்றும் ஏற்படபோவதில்லை என்று கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் 1983-ம் ஆண்டு தோன்றியது. அதற்கு காரணம் யாழ் நூலகத்தை தீயிட்டி எரித்ததுதான். இதை எதிர்த்து இளைஞர்கள் போராட்டக்குழுவாக மாறினார் அப்போது இருந்த அரசியில் சூழ்நிலை வேறு, இப்போது உள்ளது அரசியல் சூழ்நிலைவேறு இதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மூன்று வேளை உணவு, கல்வி , மருத்துவம் , இது இருந்தால் போதும் மக்கள் சந்தோஷமாக இருக்கலாம் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பது நல்ல மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து பராமரிப்பது இதுதான் ஒரு தந்தையின் கடமை, பிள்ளைகளை பாதுகாத்து வளர்ப்பது தாயின் கடமை, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் அறிவு வளர்ந்தால்தான் நாடு வளரும், இதை விட்டுவிட்டு தனிநாடுவாங்கி என்ன செய்யப்போகிறீர்கள். அரசோடு தமிழ் மக்கள் ஒத்துழைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும். என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்த போது தேவையில்லாமல் பிரிவினைவாதம் பேசி அரசை எதிர்த்ததன் காரணமாக பல உயிர்கள் பலியாகின. நாட்டில் ரத்த ஆறு ஒடியது, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் இனி ரத்த ஆறு ஓடாது என்பதால் மகிழ்ச்சியடைந்தேன்.
மீண்டும் எதற்காக நாட்டை பிரித்துக் கொடுக்க கேட்கிறீர்கள் நாட்டை பிடித்து என்ன செய்யப் போகிறீர்கள் நாட்டுப்பற்றுடன் இருந்து அனைவரும் உழைத்து நாட்டை முன்னேற்றுவதே நல்ல குடிமக்களுக்கு அழகு. அதை விட்டுவிட்டு காணியை பிரித்துக் கொடுங்கள் என்று கூறுவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. எனவே இனியாவது போராட்டம் அரசியல் நாட்டைப் பிரிப்பது என்றில்லாமல் நாட்டை முன்னேற்றும் பாதையில் தமிழர்கள் முயலவேண்டும் என்று அவர் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.