கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக ராணுவத் தளபதி விகும் லியனகே அறிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தால் நடத்தப்பட்ட கார் பந்தையத்தில் கார் திடீரென பார்வையாளர்கள் மீது மோதியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்து 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்படும் ஃபாக்ஸ் ஹில் சர்க்கிளில் பாதுகாப்பற்ற பாதையில் ஒரு கார் ஓட்டுநர் பார்வையாளர் கூட்டத்தை நோக்கிக் காரில் பாய்ந்ததில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் இந்த கார் விபத்து காட்சியைக் காண முடிகிறது. ஓட்டுநர்கள் தூசிப் படலத்துக்கு மத்தியில் வேகமாகச் செல்வதையும் வீடியோவில் காணலாம். அப்போது ஒரு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிறகு மற்ற ஓட்டுநர்களை மெதுவாகச் செல்லும்படி டிராக் மார்ஷல்கள் மஞ்சள் கொடி காட்டி எச்சரிக்கிறார்கள்.
வேலை கிடைக்காமல் கழுதைப்பண்ணை தொடங்கிய இளைஞர்! லிட்டர் ரூ.5000 க்கு கழுதைப்பால் விற்பனை அமோகம்!
"மொத்தம் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர்" என்று செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா கூறியுள்ளார். இறந்தவர்களில் எட்டு வயது சிறுமியும் ஒருவர்.
கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக இந்த நிகழ்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக ராணுவத் தளபதி விகும் லியனகே அறிவித்திருந்தார்.
உலகிலேயே மிகவும் ஆபத்தான சாலைகளைக் கொண்ட நாடாக இலங்கை பெயர் பெற்றுள்ளது. சராசரியாக, 12,500 கிலோமீட்டர்கள் (7,812 மைல்கள்) சாலைகளில் தினசரி எட்டு இறப்புகள் பதிவாகின்றன.