இலங்கை குண்டு வெடிப்பு... முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அதிரடி கைது..!

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sri Lanka arrests ex-police chief and former defence secretary

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனையடுத்து, குண்டு வெடிப்பு தொடர்பாக இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்தி வந்தது. ஏற்கனவே குண்டு வெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். Sri Lanka arrests ex-police chief and former defence secretary

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.ஐ.டி அதிகாரிகள், பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

 Sri Lanka arrests ex-police chief and former defence secretary

ஆனால் இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி வரமறுத்துள்ளனர். இதையடுத்து, நரஹென்பிட்டாவில் உள்ள காவலர்களுக்கான மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் புஜித்தை கைது செய்ததுடன், ஹேமசிறி பெர்ணாண்டோவை தேசிய மருத்துவமனையிலிருந்து கைது செய்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios