ஸ்பெயின் ஊரடங்கு உத்தரவை  சற்று  தளர்த்தி உள்ள நிலையில் ,  மீண்டும் அங்கு வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது ,  இதனால் முறையான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது  உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26  ஆயிரத்தை தாண்டியுள்ளது .  இதுவரையில் கிட்டத்தட்ட ஸ்பெயினில் மட்டும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 60 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து  255ஆக உயர்ந்துள்ளது .  சுமார் 67 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் .

 

88 ஆயிரத்து  301 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  சுமார் 7 ஆயிரம்371 ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  கடந்த  சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் வைரஸ் தொற்று எண்ணிக்கை மிகுதியாக குறைந்தது ,  அடுத்த சில நாட்களில் வைரஸ் தொற்று முழுமையாக தடைபட்டிருந்தது  இதனால் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சென்சஸ் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவித்தார் , இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீடுகளில் முடங்கியிருந்த  ஸ்பெயின் நாட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார் ,  சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பணிக்கு திரும்பியதாக அரசு அறிவித்தது . பல தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளன,   ஸ்பெயினில் இயல்புநிலை திரும்புவது முற்போக்கான விஷயம்தான் அதேநேரத்தில் தொற்றுநோயை  கண்காணிக்கவும் புதிய தொற்றுநோய்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் என தெரிவித்தார். 

தொடர்ந்து வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் ,  எந்த மாதிரியான இயல்பு நிலைக்கு  திரும்புகிறோம்  என எங்களுக்கே தெரியவில்லை என கூறியிருந்தார்,   இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில 5 ஆயிரத்து 500 பேருக்கு புதிதாக கொரோனா  தோற்று ஏற்பட்டுள்ளது .  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதிலிருந்து அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .  இதனால்  அதிர்ச்சி அடைந்த பிரதமர் இந்த வைரசை கட்டுபடுத்த ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலைக்கு திரும்புவது என்ற பேச்சிக்கே இடமில்லை அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார் . கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு  நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் , வைரசுக்கு எதிராக மிகவும் ஆற்றல்மிக்க தடுப்பூசிகள் உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது ,  ஆனால் அது மக்களின் பயன்பாட்டிற்கு வர இன்னும் 18 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் ஊரடங்கை  தளர்த்தியுள்ள  ஸ்பெயின் மீண்டும்  கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்துமோ என்ற அச்சத்தில் ஸ்பெயின் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.