தில்லாக ஊரடங்களை தளர்த்திய ஸ்பெயின்..!! எமனுக்கே சவால் விடும் ஐரோப்பிய நாடுகள்..!!
அதேபோன்று டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது இதே நிலையில் நீடித்தால் பள்ளிகளில் விரைவில் திறக்கப்படும் என டென்மார்க் அறிவித்துள்ளது .
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்ததையடித்து அந்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது இதனால் லட்சக் கணக்கான மக்கள் பணிக்கு திரும்ப தயாராகி வருகின்றனர் . தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கை தளர்த்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் இதுகுறித்து ஸ்பெயின் விளக்கமளித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது வைரஸால் 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது இந்நிலையில் அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்துக் கண்டங்களும் கொரோனாவால் முடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடான ஸ்பெயின் இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் ஸ்பெயின் மூன்றாவது இடத்தில் உள்ளது .
அதாவது இந்த நாட்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 18 ஆயிரத்து 56 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வந்தது இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டில் முடங்கி இருந்தனர் , ஸ்பெயின் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது . அதுமட்டுமல்லாமல் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது , மார்ச் மாத இறுதியில் கிட்டத்தட்ட இங்கு 9 லட்சம் பேர் வேலை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் ஸ்பெயின் அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்தி உள்ளது . இதனால் திங்கட்கிழமை மட்டும் மாட்ரிட் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் . ஏற்கனவே ஒரு மாதம் தீவிர ஊரடங்கில் இருந்த ஸ்பெயின் மக்கள் இரண்டாவது மாத ஊரடங்கு எட்டிய நிலையில் இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது .
இதனால் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இருப்பினும் கடைகள் , பார்கள் , மற்றும் உணவகங்கள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நாட்டின் பிரதமர் , பெட்ரோ சான்சஸ் , நாடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது முற்போக்கான விஷயம்தான் , அதே நேரத்தில் தொற்றுநோயை கண்காணிக்கவும் புதிய நேற்தொற்று உருவாகாமல் தடுக்கவும தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து வைரஸ் எங்களை அச்சுறுத்தி வரும் நிலையில் நாங்கள் எந்த வகையான இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை என அவர் கூறியுள்ளார் . ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய வழிகாட்டுதலை அரசு அறிவித்துள்ளது , தொழிற்சாலைக்கு திரும்பும் ஊழியர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் , குறைந்தது இரண்டு மீட்டர் தொலைவில் சமூக இடைவெளிகளை தொழிலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளது
.
ஸ்பெயின் அரசு நாடு முழுவதும் ஒரு மில்லியன் கொரோனா சோதனைக் கருவிகளை வழங்கியுள்ளது, எதிர்வரும் நாட்களில் இன்னும் ஐந்து மில்லியன் கருவிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது . பொது இடங்களில் காவல் துறையினர் மக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி வருகின்றனர் அதுமட்டுமின்றி பொது போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஸ்பெயின் பொது தொழிலாளர் சங்கம் ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ள நிலையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் முதலாளிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் என குற்றம்சாட்டி உள்ளது . இவ்வுலகில் அரசு எடுத்துள்ள இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்களை பணிக்கு அனுப்புவது பொறுப்பற்ற செயல் என விமர்சித்துள்ளனர் , இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கட்டுக்குள் வரும்வரை அல்லது அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வகையில் அவசரகதியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளது.
ஸ்பெயின் எடுத்துள்ள இதே பாணியில் ஈஸ்டர் பண்டிகைக்கு பிறகு படிப்படியாக கடைகள் திறக்கப்படும் என ஆஸ்திரியா அறிவித்துள்ளது . ஜெர்மனியும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடிவு செய்துள்ளது . அதேபோன்று டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது இதே நிலையில் நீடித்தால் பள்ளிகளில் விரைவில் திறக்கப்படும் என டென்மார்க் அறிவித்துள்ளது . ஸ்பெயின் அவசரகதியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ள நிலையில் அங்கு மீண்டும் 2442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ,கூடுதலாக 300 பேர் உயிரிழந்துள்ளனர் . ஊரடங்கு உத்தரவு தளர்வை திரும்ப பெறாவிட்டால் இன்னும் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஸ்பெயின் செய்வதறியாது திகைத்து வருகிறது.