லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த  நடிகைகள் அடுத்தடுத்து திடீரென மர்மமான முறையில்  மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எத்தனை புகழின் உச்சிக்கு சென்றாலும்,  கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து  வைத்திருந்தாலும்,   யாரும் இந்த பூமியில் நிரந்தரமாக இருந்துவிடப் போவதில்லை, ஒரு நாள் மரணத்தை சந்தித்தே தீரவேண்டும் என்பதுதான் இயற்கையின் நீதி.

 

ஆனால் மக்களின் மனங்களில் இடம்பிடித்து வண்ணத்துப் பூச்சிகளாய் வளம் வரும் நடிகைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  தென் கொரிய நாட்டின் நடிகையின் மரணமே இதற்கு எடுத்துக்காட்டாகும்.  பணம் புகழ் ஆடம்பரம் என பகட்டாக வாழும் சிலரின் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து விடுவதுதான் விதியின் பலன்.  அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் அதாவது தென்கொரியாவின் கங்கனம் என்ற பகுதியை சேர்ந்த 28 வயதான நடிகையும் பாடகியுமான கூஹாரா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரை சுமார் ஒன்றரை  மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்தனர். இளைஞர்களின் கனவு கன்னியாக அவர் இர்ந்துவந்தார்.  ஆனால் அவர் கடைசியாக தெரிவித்த ஒரே தகவல் குட்நைட் என்பது மட்டும்தான். 

படுக்கைக்கு தூங்கச் சென்றவர் பிறகு  எழுந்திருக்கவே இல்லை என்பதுதான் அதில் உள்ள சோகம் .  கூஹாராவின் முன்னாள் காதலன் அவரின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. அதேநேரத்தில்  அந்த விவகாரத்தால் கடுமையாக மன உளைச்சலில் அவர் இருந்ததால் மன அழுத்தத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில்  அவரை பிளாக்மெயில் செய்து வந்த காதலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

கூஹாராவின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை போலீசார்  கண்டுபிடிக்கவில்லை . தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிட்டி அண்டர்,  சீக்ரெட் லவ் ,  இட்ஸ் ஓகே தட் லவ்,  என்ற ரியாலிட்டி ஷோவில் அவர் பங்கேற்ற இருந்தார் .  கூஹாராவைப் போலவே அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான சல்லி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.