தனது மனைவியை ஆபாசமாக சித்தரித்து விளம்பரங்கள் செய்த தென் கொரியா நாட்டின் மீது வடகொரியா அதிபர் உச்சபட்ச போபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகை.கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் குசலம் விசாரித்த பிறகு பகை தணிந்து பொறுமை நிகழ்ந்தது. தற்போது கொரோனா பதற்றத்தையும் மீறி வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் மீண்டும் பகைமை கொழுந்து விட்டு தக்கிறது. காரணம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மனைவியின் ஆபாச டி.வி.டி.

கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வடகொரிய அரசை விமர்சித்துதுண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு பறக்கவிட்டனர். இதனால் வடகொரிய அதிபரின் கோபம் உச்சத்துக்கு சென்றது. அடுத்து அனைத்து உறவுகளையும் துண்டித்து எதிரி நாடாக அறிவித்தார் கிம் ஜாங் உன். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜங், ’’தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, தென்கொரியா எதிரி நாடுகள் போடும் நாய் பிஸ்கட்டுகளுக்காக அலையும் நாடு ‘’ என விமர்சித்தது.  அடுத்து  தென் கொரியா உடனான உறவை வடகொரியா மொத்தமாக துண்டித்தது.

 

இதனால் கொதிப்பான தென் கொரியா, வடகொரிய அதிபரின் மனைவியை பற்றி ஆபாச படங்களை சித்தரித்து பலூன்களை பறக்கவிட்டுள்ளது. இது குறித்து வட கொரியாவின் ரஷ்ய உயர்மட்ட தூதர், அலெக்ஸாண்டர் மாட் செகோரா, கூறுகையில் ‘’வடகொரியாவின் முதல் பெண்மணி ரி சோல் ஜுவை ஆபாசமாக தென்  கொரியா சித்தரித்துள்ளது. ஹீலியம் பலூன்களை ஏவும் தென்  வடகொரியாவுக்கு வட கொரிய அரசு கடுமையாக பதிலளித்து வருவதால், அங்குள்ளவர்கள் வடகொரியாவின் முதல் பெண்மணியை ஆபாசமாக சித்தரித்து விளம்பரம் செய்கின்றனர். பலூன் விளம்பரங்களில் வட கொரியத் தலைவரின் மனைவிக்கு எதிரான மோசமான மற்றும் அவமதிக்கும் பிரச்சாரங்கள் அடங்கி உள்ளன. ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்தி அநாகரீகமான முறையில் இந்த பிரச்சாரம் உருவாக்கப்பட்டது, இது வட கொரியத் தலைவர்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார்.