தென்கொரியாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல் : உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு!

தென்கொரியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதையடுத்து உச்சபட்ச எச்சரிக்கை நிலையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

பறவை காய்ச்சல் நோய் கிருமி தென்கொரியாவில் பரவி வரும் நிலையில் தென்கொரிய விவசாயதுறை அமைச்சகம் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

நோய் தொற்று போன்றவைகளை தடுக்கும் விதமாக பண்ணைகளில் உள்ள கோழிகள் அழிக்கப்படும் நடவடிக்கைகள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது.

ஆசியா கண்டத்தில் பொருளாதார ரீதியில் 4வது பெரிய நாடான தென்கொரியாவில் பறவை காய்ச்சல் நோய் கிருமி பரவுவதை தடுக்கும் விதமாக 12 சதவிகித கோழிப்பண்ணைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக கோழிப்பண்ணைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.