150 ஆண்டுகள் கடந்து பயணத்து வருகிறது ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி (Oxford English Dictionary (OED)). இப்போது பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் “அய்யோ”(Aiyoh) என்ற வார்த்தையை தனது அகராதியில் இணைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆங்கில அகராதிகள் நிறைய இருந்தாலும் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் அகராதியாக ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி இருந்து வருகிறது. பிற மொழி பேசுபவர்கள், ஆங்கில வார்த்தைகளை முறையாக படிக்க, ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி மிகவும் தேவையான ஒன்றாக விளங்கி வருகிறது.

ஆங்கில சொல்லுக்கு முழுமையான அர்த்தத்தை தெரிந்து கொள்ள ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி பெரிது உதவி வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் விரல் நுணியில் இணையத்தின் வசதியால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், உண்மை தன்மையுடன் அதிகாரப்பூர்வமாக ஒரு விடயத்தை நாம் அறிய முயலும் போது, நாம் இன்றும் புத்தகங்களை நம்பியே இருக்கிறோம். அந்த வகையில் ஆங்கில அகராதிகள் வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்து வருகிறது.

ஆங்கில மொழியை பொருத்தவரை உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை அப்படியே சுவீகரித்துக்கொள்ளும் தன்மையாலேயே வளர்ந்த மொழி. அது போலவே, ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரியும் புதிய வார்த்தைகளை தனது அகராதியில் அவ்வப்போது இணைத்து வருகிறது.

இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகளை சேர்த்துள்ள ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி தற்போது தென்னிந்திய மக்கள் அதிகம் பயன்படுத்து வார்த்தையான “அய்யோ” என்ற வார்த்தையை தனது அகராதியில் இணைந்துள்ளது. இனி “அய்யோ” என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆங்கிலம் தெரிந்த அனைவரும் ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரியில் தெரிந்துகொள்ளலாம்.