நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!
நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானம் எதிர்பாராத விதமாக மற்றொரு விமானம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இரண்டு விமானங்களும் அப்பளம் போல் நொறுங்கி கீழே விழுந்தன.
இதையும் படிங்க;- சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 27 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி! 20 பேர் படுகாயம்
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விபத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். ஒரு விமானத்தில் இருவரும், மற்றொரு விமானத்தில் ஒருவரும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர்கள் மூவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதே நேரத்தில் விபத்துக்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- iran:ஈரான் பெண் மாஷா போலீஸ் காவலில் உயிரிழப்பு: ஹிஜாப்பை தீ வைத்து கொளுத்தி, முடியை வெட்டி பெண்கள் எதிர்ப்பு