iran:ஈரான் பெண் மாஷா போலீஸ் காவலில் உயிரிழப்பு: ஹிஜாப்பை தீ வைத்து கொளுத்தி, முடியை வெட்டி பெண்கள் எதிர்ப்பு
ஈாரனில் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீஸாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பெண் காவலில் உயிரிழந்தார். இதையடுத்து, நாடுமுழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
ஈாரனில் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீஸாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பெண் காவலில் உயிரிழந்தார். இதையடுத்து, நாடுமுழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இதில் ஒரு இஸ்லாமிய பெண், தனது ஹிஜாப்பை தீ வைத்து கொளுத்தியும், தலை முடியை வெட்டியும் கடும் எதிப்புத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பெண்கள் முறைப்படி ஹிஜாப் அணிகிறார்களா, உடலை காட்டாமல் ஆடை அணிகறார்களா, பொதுவெளியில் ஒழுக்கத்துடன் நடக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீஸ் பிரிவில் தனியாக மாரல் போலீஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. ஈரானில் 7 வயது முதல் வயதான பெண்கள் வரை வெளியே வந்தால் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை. தனது தலைமுடி தெரியும் வகையில் ஹிஜாப் அணிந்திருந்தார். இதையடுத்து, ஈரானின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் போலீஸார், மாஷா அமினியை கைது செய்தனர். ஆனால், இந்த கைதுக்கு மாஷா எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனால், போலீஸாருக்கும், மாஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, பொதுவெளியில் ஏற்பட்ட இந்தமோதல் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாஷாவை அடித்து உதைத்த போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதை ஏராளமானோர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் உலவவிட்டதால் வைரலாகியது.
இந்நிலையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா திடீரென உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்ககப்பட்டது.இதையடுத்து, மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானில் பெண்கள் போராடத் தொடங்கினர்.
இனி விசா இல்லாமலே ரஷ்யா போகலாம்.. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ரஷ்ய அதிபர் புடின்.!
டெஹ்ரான் மருத்துவமனையில் மாஷா உயிரிழந்ததையடுத்து அந்த மருத்துவமனை முன் ஏராளமான பெண்கள் கூடி அரசுக்கு எதிராகவும், போலீஸாருக்கு எதிராகவம் போராடி, கோஷங்களை எழுப்பினர்.
ஈரான் பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான மஷி அலினிஜெத் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ ஈரான் பெண் ஒருவர் போலீஸாரின், அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது ஹிஜாப்பை தீ வைத்து கொளுத்திவிட்டு, தனது தலைமுடியையும் வெட்டிக்கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்தார். அந்த புகைப்படங்களையும் பதிவிட்டார்.
மாஷா அமினி மறைவுக்கு எதிராக ஏராளமான பெண்கள் டெஹ்ரான் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். சில பெண்கள் ட்விட்டரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்களின் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் தரப்பில் கூறுகையில் “ மாஷா அமினி, நாட்டின் ஹிஜாப் சட்டத்தை மதித்து நடக்கவில்லை. அவரை நாங்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்லும்போது அவருக்கு உடல்நலன் சரியில்லை” எனத் தெரிவித்தனர்.
வெள்ளை இன மேட்டிமை, வெறுப்பை வளர்க்கும் வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை: ஜோ பிடன் திட்டவட்டம்
ஈரான் பழமைவாத தலைவர்கள் கூறுகையில் “ ஹிஜாப் சட்டம் தீவிரமாக்கப்பட வேண்டும், ஒழுக்கக் குறைவாக நடக்கும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். பெண்ணுரிமை தலைவர்கள், இயக்கங்கள், ஹிஜாப்பை புறக்கணிக்க வேண்டும், சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை எனத் தெரிவித்துள்ளனர்.