Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூரர்கள் கவனத்திற்கு.. Gojek சேவையில் முக்கிய மாற்றம் - நவம்பர் முதல் அமலாகிறது - முழு விவரம்!

சிங்கப்பூரில் ரைடு-ஹெய்லிங் சேவைகளை வழங்கி வரும் தளமான "Gojek சிங்கப்பூர்", வருகின்ற நவம்பர் மாதம் 2023 முதல், அதன் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பல முக்கிய மாற்றங்களைச் செயல்படுத்தும் என்று அறிவித்துள்ளது.

Singapore Ride Hailing Service Provider Gojek important notice for consumers and their drivers ans
Author
First Published Oct 19, 2023, 10:18 PM IST | Last Updated Oct 19, 2023, 10:26 PM IST

வெளியான தகவலின்படி நவம்பர் 1, 2023 முதல் "ரொக்கமில்லா கட்டண முறைகளுக்கு" (Cashless Payments), வாடிக்கையாளர்களிடம் "பரிவர்த்தனை கட்டணம்" (Transaction Fee) வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கூடுதலாக, ஓட்டுநர்களுக்கான சேவைக் கட்டணம் (ஓட்டுனர்கள், Gojekக்கு செலுத்தும் கட்டணம்) குறைந்தபட்சம் 2024 இறுதி வரை 15 முதல் 10 சதவீதம் வரை குறையும் என்றும் அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

வாடிக்கையாளர்களிடம், அவர்கள் Cashless Paymentகளை பயன்படுத்தி பணம் செலுத்தும்போது, பயணிகள் பயணித்த தூரத்தைப் பொறுத்து கட்டணம், S$0.10 முதல் S$0.60 (இந்திய மதிப்பில் 6 ரூபாய் முதல் 36 ரூபாய்வரை) டாலர் வரை இருக்கும் என்றும், மேலும் இது "பணப் பரிவர்த்தனை கட்டணம்" என்பதன் கீழ் வாடிக்கையாளரின் ரசீதுகளில் பிரதிபலிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா எல்லை.. நிலைமை மிகவும் மோசமாக இருக்கு.. Asianet Newsக்கு Exclusive பேட்டி அளித்த இந்திய வம்சாவளி யூதர்கள்

இந்த அமைப்பு சிங்கப்பூர் சந்தையில் புதியது அல்ல என்றும் Gojek தெரிவித்துள்ளது, வாடிக்கையாளர்கள் தங்கள் சவாரிக்கு பணம் செலுத்த ரொக்கமில்லா கட்டண முறைகளைப் பயன்படுத்தும் போது மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓட்டுனர்களுக்கான சேவை கட்டணம் குறைப்பு 

தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில், Gojekன் ஓட்டுநர்களுக்கான சேவைக் கட்டணம் 20 சதவீதமாக இருந்தது. மேலும் கடந்த ஜூன் 2021ல், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஓட்டுநர்களின் வருவாயை ஆதரிப்பதற்காக அந்நிறுவனம் அதன் சேவைக் கட்டணத்தை 20 முதல் 10 சதவீதமாக தற்காலிகமாகக் குறைத்தது.

தொற்றுநோயிலிருந்து வெளியேறி, ரைட்-ஹெய்லிங் சேவைகளுக்கான தேவை தற்போது அதிகரித்ததால், நிறுவனம் அதன் ஓட்டுநர்களுக்கான சேவைக் கட்டணத்தை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அண்மையில் திருத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்முறை, சேவைக் கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது நவம்பர் 1, 2023ல் தொடங்கும் என்றும், மற்றும் குறைந்தபட்சம் 2024 இறுதி வரை இது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்புகள் அதன் இயக்கிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்பட்டு Gojekன் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது என்று Gojek நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சேவைக் கட்டணத்தைக் குறைப்பது, Gojekன் சேவைகளை நுகர்வோருக்கு "நம்பகமானதாகவும், அணுகக்கூடியதாகவும்" வைத்திருக்கும். அதே வேளையில், ஓட்டுநர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வருவாயை அதிகரிக்க உதவும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்.. அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்திக்கும் இந்திய அமைச்சர் ஜெய் சங்கர் - எதற்காக இந்த சந்திப்பு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios