சிங்கப்பூர்.. அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்திக்கும் இந்திய அமைச்சர் ஜெய் சங்கர் - எதற்காக இந்த சந்திப்பு?
உத்தியோகபூர்வ பயணமாக நேற்று இந்தோனேஷியா சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்கள், இன்று அக்டோபர் 19ம் தேதி சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற அஸெங் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் பிராந்திய மாநாட்டிற்கு தலைமைவகித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் அவர்கள் இந்திய சிங்கப்பூர் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இந்தியாவிற்கு அவற்றின் தாக்கங்களை மதிப்பீடு குறித்து மதிப்பீடு செய்தார்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று அக்டோபர் 19 முதல் 21 வரை சிங்கப்பூர் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று அக்டோபர் 18 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
காஸா மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்கள்.. மனதை உலுக்கும் வீடியோ..
மேலும் இந்த மூன்று நாள் பயணத்தில், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீன் ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றார். மேலும் இன்று நடந்த கலந்தாய்வில் சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் ng eng hen அவர்களை சந்தித்து பேசினார் ஜெய்சங்கர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து ஆராயும் இந்தியா மாற்று சிங்கப்பூர்
இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த சிங்கப்பூர் பயணத்தின்போது இந்தியாவும், சிங்கப்பூரும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆராயும். கடந்த செப்டம்பர் 17, 2022 முதல் நிறுவப்பட்ட இந்தியா-சிங்கப்பூர் மந்திரி வட்டமேசைக்கு இணங்க டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
ஜெய்சங்கரின் இந்த வருகை, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை" மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம் அமையவுள்ளது. இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்து, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும்.
ஏற்கனவே சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் இங் ஹென் அவர்களை சந்தித்த இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேலும், சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங் ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளார்.