Asianet News TamilAsianet News Tamil

அன்னாசிப்பழத்தால் வந்த பிரச்சனை.. வாக்களிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் - ஏன் தெரியுமா?

சிங்கப்பூரில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று செப்டம்பர் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. முன்னாள் சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாகூப் உளிட்ட பலரும் ஆர்வமாக வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.

Singapore President Election Women with pineapple shirt not allowed to vote ans
Author
First Published Sep 1, 2023, 5:09 PM IST | Last Updated Sep 1, 2023, 5:09 PM IST

இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த பெண் ஒருவரை திருப்பி அனுப்பியதாக சிங்கப்பூரின் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்குச் சாவடிகளுக்கு தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பிரதிபலிக்கும் எந்தவித பொருட்கள் அல்லது பிற விஷயங்களை எடுத்து வர கூடாது.

அந்த வகையில் அந்த பெண்மணி அணிந்து வந்த ஆடை தேர்தல் சட்டத்திற்கு எதிராக இருந்ததால் அந்த பெண் திரும்ப அனுப்பட்டார் என்றும். அவர் அந்த உடையை மாற்றி வந்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வானில் தோன்றிய அரிய நிகழ்வு! சூரிய ஒளிவட்டம் உருவாக என்ன காரணம்? அதற்கு என்ன அர்த்தம்?

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், "சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் ரிங் பிரைமரி ஸ்கூலில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் இன்று காலை அன்னாசிப்பழ உருவங்கள் கொண்ட ஆடையை அணிந்த பெண் ஒருவர் வந்தார். 

ஆகவே ELDன் அறிவுரைக்கு இணங்க, அவரது உடையை மாற்றுமாறு தேர்தல் அதிகாரி அவருக்கு அறிவுறுத்தினார், வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை ஒத்த அல்லது அதை குறிக்கும் வகையில் உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஆகவே அந்த வாக்காளர் அவரது உடையை மாற்றிய பின் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்"என்று அறிவித்திருந்தது.

தமிழக வம்சாவளியை சேர்ந்த தர்மன் ஷண்முகரத்னம் உள்பட இந்த அதிபர் தேர்தலுக்கு மூன்று பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : அதிபர் ஹலிமா, பிரதமர் லீ வாக்களிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios