Singapore News :G20 வர்த்தக, முதலீட்டு மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வரும் சிங்கப்பூர் அமைச்சர் கான் கிம் யோங்!

இந்தியாவில் நடைபெற உள்ள G20வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கான் கிம் யோங் (Gan kim Yong) இரு நாள் பயனமாக இந்தியா வருகிறார்.
 

Singapore Minister Khan Kim Yong arrives in India for the G20 Trade and Investment Summit

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், G20 வர்த்தக முதலீட்டு மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24 மற்றும் 25) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற மைய்ப்பொருளில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

எதிர்கால உலக வளர்ச்சி, பாதுகாப்பு, பலதரப்பு வர்த்தக நடைமுறை ஆதரவு, அனைவரையும் உள்ளடக்கிய திறன் மிக்க வர்த்தகம், காகிதமில்லா வர்த்தகத்துக்கான தொழில்நுட்பப் பயன்பாடுகளைத் துரிதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துக் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மகிழ்ச்சியில் சிங்கப்பூர் Singles.. அட்டகாசமாக அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் - இனி அவங்க பாடு கொண்டாட்டம் தான்!

இந்த G20 வர்த்தக முதலீட்டு மாநாட்டு விவாதங்களில் சிங்கப்பூர் அரசு ஒரு விருந்தினர் நாடாகப் பங்கேற்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் கூட்டத்தில், சிங்கப்பூர் நாட்டின் சார்பில் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கான் கிம் யோங் (Gan kim yong) கலந்துகொள்கிறார். அப்போது அவர், மற்ற உலக நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார். மேலும், இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தவும், , ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கான் கிம் யோங் ஆராய்வார்.

எங்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள்.. காரணம் என்ன தெரியுமா? சீக்ரெட் சொன்ன முன்னாள் அமைச்சர் சண்முகரத்தினம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios