புறாவுக்கு தீனி போட்டா குற்றமா? ராஜேந்திரனுக்கு 29,000 ரூபாய் அபராதம் விதித்த அரசு - முழு விவரம்!

சிங்கப்பூரின் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, அங்கு சுற்றித் திரியும் வன விலங்குகளுக்கு உரிமம் இல்லாமல் உணவு அளிப்பது சட்டத்திற்கு புறம்பான குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Singapore Man Fined For Feeding Pigeons even after getting warned many times

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள ராஜேந்திரன் என்ற 67 வயது நபருக்கு சுமார் 4800 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் ராஜேந்திரன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள புறாக்களுக்கு உணவளித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அன்று, Aljunied Crescent பகுதியில் உள்ள, தேசிய பூங்கா வாரிய (NParks) அமலாக்க அதிகாரிகள், ராஜேந்திரன் ரொட்டித் துண்டுகளை நடைபாதை மற்றும் புற்களின் மீது எறிந்து பறவைகளுக்கு உணவளிப்பதைக் கண்டனர்.
 
அவர் செய்த காரியம் குற்றம் என்று அதிகாரிகள் சொல்லியும், அவர் சும்மர் 15 முறை பறவைகளுக்கு உணவளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 26 முதல் டிசம்பர் 30, 2022 வரை, ராஜேந்திரன் கெயிலாங் பகுதியைச் சுற்றி 15 தனித்தனி சந்தர்ப்பங்களில், வனவிலங்குகளுக்கு உணவளித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

இது ரயிலா இல்ல மாளிகையா?.. சிங்கப்பூர் to பின்னாங் பயணம் - ஒரு டிக்கெட் விலை என்ன தெரியுமா?

ராஜேந்திரன் ஒவ்வொரு முறையும் சுமார் 20 முதல் 30 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்பிலான ரொட்டிகளை வாங்கி அதனை கொண்டு புறாக்களுக்கு உணவளித்துள்ளார். சில சமயங்களில் தனது உணவில் இருந்து மீதம் இருக்கும் அரிசியை அவர் உணவாக பறவைகளுக்கு கொடுத்துள்ளார். ராஜேந்திரனுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது முதல் முறையுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பலமுறை அவர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தியுள்ளார். 

மக்கள் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதால், அது அந்த விலங்குகளுக்கு நன்மையை விட அதிக தீமைகளையே உண்டாக்கும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்படி தொடர்ச்சியாக உணவு அளிக்கப்பட்டால் அவை மனிதனின் செல்ல பிராணிகளாக மாறி தனது இயல்பை இழந்துவிடும் என்றும் சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி.. மக்களே உஷார் - PM வெளியிட்ட அவசர செய்தி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios