Asianet News TamilAsianet News Tamil

இது ரயிலா இல்ல மாளிகையா?.. சிங்கப்பூர் to பின்னாங் பயணம் - ஒரு டிக்கெட் விலை என்ன தெரியுமா?

சிங்கப்பூரில் ரயில் பயணங்களை விரும்பும் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஈஸ்டர்ன் & ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் சேவை.

Fine Dining with Great view eastern oriental express gives luxury travel between Singapore and Penang
Author
First Published Jul 25, 2023, 4:00 PM IST

சிங்கப்பூர் முதல் மலேசியாவில் உள்ள பின்னாங் வரை சுமார் 650 கிலோமீட்டர் அழகிய பயணத்தை வழங்குகிறது இந்த ரயில் பயணம். ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணமாக எவ்வளவு தெரியுமா? சிங்கப்பூர் பண மதிப்பில் சுமார் 9000 சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 55,000 ரூபாய். 

இந்த சொகு ரயிலில் நீங்கள் பயணம் செய்ய கேபின் ஒன்றுக்கு சுமார் 55,000 ரூபாய் முதல் 13 லட்சம் வரை நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். இந்த ஈஸ்டர்ன் & ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் மொத்தம் மூன்று வகையான கேபின்களைக் கொண்டுள்ளது: பிரசிடென்ஷியல் சூட், ஸ்டேட் கேபின் மற்றும் புல்மேன் கேபின். இந்த ரயிலில் உள்ள அனைத்து கேபின்களும் ஆடம்பரமானவை.

Luxury Train

குறிப்பாக இந்த ரயிலில் உள்ள பிரசிடென்சியல் சூட், மிகப்பெரிய படுக்கைகளாக விரியும் ஒரு பெரிய சோபாவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய ஒரு கேபின் விலை தான் சுமார் 13 லட்சம் ரூபாய், இதில் உங்களுக்கு ஒரு ஆடம்பர குளியல் மற்றும் கழிப்பறை, பல்வேறு வகையிலான படுக்கை வசதிகள், விருப்பட்ட உணவுகள், பல வகை ஷாம்பெயின்கள் என்று எல்லா வசதிகளும் கிடைக்கும். 

தினமும் 5.8 லட்சம் சம்பாதிக்கும் TikToker! யார் இந்த Pinkydoll?

இந்த ரயிலில் இரண்டு பெரிய உணவகங்களும் உள்ளது, இதில் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பாரம்பரிய உணவுகள் முதல் பலதரப்பட்ட உயர்ரக உணவுகளை நீங்கள் உண்டு மகிழலாம். ஈஸ்டர்ன் & ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் பின்புறத்தில் ஒரு அரை உள்ளது. இது தேக்கு மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறப்பான அரை, இங்கிருந்து நீங்கள் ரயில் போகும் பாதையில் உள்ள அனைத்து இயக்கர் அழகையும் கண்டு ரசிக்கலாம். 

மேலும் மாலை நேரங்களில் இன்னிசை விருந்தும் உங்களுக்கு அளிக்கப்படும், பல்வேறு கலாச்சாரங்களை சார்ந்து இசைக்குழுக்கள் தினமும் மாலை நேரத்தில் இன்னிசை வழங்கி வருகின்றனர். நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள் கொண்ட இரு வகையான Packageகள் இந்த பயணத்தில் உள்ளதாம்.   

முன்னாள் காதலியை வேறு ஒருவருடன் பார்த்த காதலன்.. மைனர் பெண்ணை கத்தியால் குத்தி, கற்பழித்த கொடூரம்!

Follow Us:
Download App:
  • android
  • ios