பயணிகள் கவனத்திற்கு.. இனி சிங்கப்பூருக்குள் "அதை" கொண்டு சென்றால் அபராதம் நிச்சயம் - அமலாகும் புது ரூல்ஸ்!

Singapore New Rules : கடந்த டிசம்பர் 19, 2023 அன்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் பிற அரசு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இது வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கும் பொருந்தும். 

Singapore government strict action banning e vaporizers tight security at checkpoints ans

Vaping எனப்படும் ஈ சிகரெட் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 19, 2023 அன்று சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூரின் பிற அரசு நிறுவனங்கள் கூட்டாக Vapingகிற்கு எதிரான புதிய மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. 

இந்த புதிய நடவடிக்கைகளில் முக்கிய பங்காக, சிங்கப்பூர் ஈ சிகரெட் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுதல், ஆன்லைனில் அவற்றை விற்பனை செய்வது மற்றும் அவற்றுக்கான விளம்பரங்களைக் கண்டறிந்து அகற்றுதல் மற்றும் சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் இந்த vaping கலாச்சாரம் வேரூன்றுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று MOH கூறியது.

AI's Death prediction | உங்களின் இறப்பு நேரத்தை 78% துல்லியமாக கணிக்கும் AI

தற்போது, ​​எலக்ட்ரானிக் வேப்பரைசர்கள் (இ-வேப்பரைசர்கள்) சிங்கப்பூரில் சட்டவிரோதமானது, மேலும் புகையிலை (விளம்பரங்கள் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், இவ்வகை மின் ஆவியாக்கிகளை வைத்திருப்பது, பயன்படுத்துதல் அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக S$2,000 (சுமார் 1 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

E Vaporisers மற்றும் அவற்றின் கூறுகளை இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, விற்பனை செய்வது குற்றமாகும். இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு S$10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தண்டனை பெற்ற பிறகும் வெளியே வந்தே அதே குற்றத்தை செய்தால் அடுத்தடுத்த குற்றங்களுக்கு S$20,000 அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

E Vaporisers சட்டவிரோதமாக இருந்தபோதிலும், சில பயனர்கள் டெலிகிராம் போன்ற பயன்பாடுகள் மூலம் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஆன்லைனில் அவற்றை வாங்குவதை அதிகாரிகள் கவனித்துவருகின்றனர். 

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்.. உலக அளவில் முடங்கிய X தளம் - என்ன ஆச்சு? தவிக்கும் யூசர்ஸ்!

நில, கடல் மற்றும் வான்வழி முனையங்களில் சோதனை 

சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) ஆகியவை வரும் மாதங்களில் நிலம், வான் மற்றும் கடல் சோதனைச் சாவடிகளில் நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகளை மேற்கொள்ளும். சாங்கி விமான நிலையத்திலிருந்து தொடங்கி, உள்வரும் பயணிகளின் வருகை அரங்குகளில் E Vaporizers மற்றும் அவற்றின் பாகங்கள் உள்ளதா என்று சோதனையிடப்படும். 

E Vaporizers அல்லது அவற்றின் கூறுகளுடன் கண்டறியப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தவறுதலாக அதை எடுத்து வருபவர்கள், சோதனைச்சாவடிகளில் அவர்களாக முன்வந்து அதை ஒப்படைத்தால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios